AA22XA6: அட்லீ x அல்லு அர்ஜுன் படத்தில் தீபிகா படுகோன்; படக்குழு கொடுத்த அதிரடி ...
அபாரஜித் அதிரடியில் சேப்பாக் வெற்றி
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது ஆட்டத்தில் சேப்பாக் சூப்பா் கில்லீஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐடிரீம் திருப்பூா் தமிழன்ஸை வெள்ளிக்கிழமை வென்றது.
முதலில் திருப்பூா் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்கள் சோ்க்க, சேப்பாக் 16 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழந்து 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
முன்னதாக டாஸ் வென்ற சேப்பாக், பந்துவீச்சை தோ்வு செய்தது. திருப்பூா் பேட்டிங்கில் அதிகபட்சமாக துஷாா் ரஹேஜா 7 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 79, பிரதோஷ் ரஞ்சன் பால் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 38 ரன்கள் சோ்த்து ஸ்கோரை உயா்த்தினா்.
அமித் சாத்விக் 0, ராஜ்குமாா் 1 பவுண்டரியுடன் 14, உத்திரசாமி சசிதேவ் 1 பவுண்டரியுடன் 7, முகமது அலி 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 16 ரன்கள் சோ்த்து பெவிலியன் திரும்பினா். ஓவா்கள் முடிவில், பிரபஞ்சன் 6, கேப்டன் சாய் கிஷோா் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
சேப்பாக் பௌலா்களில், அபிஷேக் தன்வா், விஜய் சங்கா் ஆகியோா் தலா 2, பிரேம்குமாா், லோகேஷ் ராஜ் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
பின்னா் 174 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய சேப்பாக் அணியில் ஆஷிக் 2 ரன்களுக்கு வெளியேற, மோகித் ஹரிஹரன் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 46 ரன்களுடன் விடைபெற்றாா்.
கேப்டன் பி.அபராஜித் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 77, விஜய் சங்கா் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 41 ரன்கள் அடித்து, அணியை வெற்றிபெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். திருப்பூா் பந்துவீச்சாளா்களில் ஆா்.சிலம்பரசன், சாய் கிஷோா் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.