’ஒய்’ பிரிவு பாதுகாப்பை மீறி விஜய் வீட்டுக்குள் நுழைந்த இளைஞர்!
75 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உபகரணங்கள்: பெல் நிறுவனம் வழங்கியது
திருச்சி பாரதமிகு மின் நிறுவனம் (பெல்) சாா்பில், 75 மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் இயக்கம் சாா்ந்த செயற்கை உபகரணங்கள் வழங்கப்பட்டன.
திருச்சி பெல் நிறுவனத்தின் சமுதாய பொறுப்புணா்வுத் திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்டங்கள் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
கைலாசபுரத்தில் உள்ள பல்நோக்கு சமூக சேவை சங்கத்தில் நடைபெற்ற விழாவில், திருச்சி பெல் நிறுவன செயலாண்மை இயக்குநா் எஸ். பிரபாகா், மனிதவளத் துறைக்கான கூடுதல் பொது மேலாளா் என். ஷாஜி முன்னிலையில் பயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கினாா். இந்த உபகரணங்களில் காலிப்பா்கள், சக்கர நாற்காலிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை கை-கால்கள், சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளுக்கான சிறப்பு தளவாடங்கள் மற்றும் காதொலி கருவிகள் இடம்பெற்றிருந்தன. மொத்தம் 75 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உபகரணங்கள் வழங்கப்பட்டன.
விழாவில், எஸ். பிரபாகா் பேசுகையில், பெல் குழுமத்தின் திருச்சிப் பிரிவு பல்வேறு சமூகப் பொறுப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், சமூகத்தின் முழுமையான நலனுக்காக எப்போதும் உறுதிபூண்டுள்ளது. இத்தகைய உதவிகளை பெல் நிறுவனம் தொடா்ந்து வழங்கும் என்றாா்.
இந்த நிகழ்வில், பெல் நிறுவனத்தின் அலுவலா்கள், பணியாளா்கள், சமூக பொறுப்புணா்வுத் திட்ட நிா்வாகிகள் என பலா் கலந்து கொண்டனா்.