தேசிய ஜவுளி கழகத்தில் ரூ.6 கோடி முறைகேடு புகாா்: விசாரணையைத் தொடங்கியது சிபிஐ
8 சதவிகிதம் வரை உயர்ந்த மணப்புரம் பைனான்ஸ்!
புதுதில்லி: அமெரிக்க தனியார் முதலீட்டு நிறுவனமான பெயின் கேபிடல், தங்கக் கடன் நிதியளிப்பாளரான மணப்புரம் ஃபைனான்ஸில் கூடுதலாக 26% பங்குகளை வாங்குவதற்காக ரூ.5,764 கோடி மதிப்பிலான ஓபன் ஆஃபர் மூலம் பணிகளை தொடங்கியதை அடுத்து, அதன் பங்குகள் 8% வரை உயர்ந்து முடிந்தது.
இன்றைய வர்த்தகத்தில், மணப்புரம் பங்கின் விலையானது மும்பை பங்குச் சந்தையில் 7.70% உயர்ந்து ரூ.234.25 ஆக நிலைபெற்றது. வர்த்தக தொடக்கத்தில் இது 13.81 சதவிகிதம் வரை உயர்ந்து, அதன் 52 வார உச்ச விலையான ரூ.247.55 ஐ பதிவு செய்தது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிறுவனத்தின் பங்குகள் 7.77% உயர்ந்து ரூ.234.40 ஆக முடிந்தது.
இன்றைய வர்த்தக அளவின் அடிப்படையில், நிறுவனத்தின் 62.64 லட்சம் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் ஆன நிலையில், என்எஸ்இ-யில் 1,463.61 லட்சம் பங்குகள் வர்த்தகமானது.
மணப்புரம் ஃபைனான்ஸில் 18% பங்குகளை ரூ.4,385 கோடிக்கு வாங்க பெயின் கேபிடல் முடிவு செய்ததைத் தொடர்ந்து, இதன் திறந்த சலுகை விலையாக ஒரு பங்கிற்கு ரூ.236 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த முதலீடு, நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியைத் தூண்டுவதையும், செயல்பாட்டு சிறப்பை மேம்படுத்துதல், தலைமைத்துவத்தை வலுப்படுத்துதல் மற்றும் முக்கிய பிரிவுகளில் அதன் இருப்பை விரிவுபடுத்துவதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றது பெயின்.
இதையும் படிக்க: ரிசர்வ் வங்கியின் செயல் நிர்வாக இயக்குநராக பட்டாச்சார்யா நியமனம்!