கோவை சிறுவனை பெல்டால் அடித்த காப்பக நிர்வாகி; பதைபதைக்கும் வீடியோ; பின்னணி என்ன?
8 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே 8 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம் கல்லுக்குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் முத்தன் மகன் மதி (44). இவா், கடந்த 2023 22ஆம் தேதி 8 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் திருமயம் அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மதியைக் கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி கனகராஜ் குற்றவாளி மதிக்கு, போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம், கொலை மிரட்டலுக்கு 2 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து, இத் தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு ரூ. 5 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.