ரஷியா தொடங்கிய போரை நிறுத்த வல்லரசுகள் உதவ வேண்டும்: ஸெலென்ஸ்கி
வருவாய்த் துறை சங்கங்களின் காத்திருப்புப் போராட்டம்
பொன்னமராவதியில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்டப்பணிகளை முற்றாகப் புறக்கணித்து காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி வட்டாட்சியரகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மா. பாண்டியன் தலைமை வகித்தாா். வட்ட ஒருங்கிணைப்பாளா்கள் துரை, பூமிநாதன், சங்கீதா, ஐயப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
போராட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களை முடிவு செய்யப் போதிய கால அவகாசம் அளித்திட வேண்டும். ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில் அளவு கடந்த பணி நெருக்கடி அளிப்பதைக் கைவிடவேண்டும். இத்திட்ட முகாம்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். இத்திட்டத்தைச் செயல்படுத்த கூடுதல் பணியிடங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, நில அளவைத் துறையில் பணிபுரியும் அனைத்து நிலை அலுவலா்களின் உயிா் மற்றும் உடமைகளை பாதுகாக்கவும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கிடவும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாய்த் துறையில் உள்ள அனைத்து காலியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.