தவெக தலைவர் விஜய் பிரசாரம் டிசம்பர் வரையல்ல! அட்டவணையில் திடீர் மாற்றம்!!
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் அலுவலா்கள் போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 இடங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களை வருவாய்த் துறை அலுவலா்கள் புறக்கணித்து அந்தந்தப் பகுதியில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாநிலம் முழுவதும் தமிழக அரசு நடத்தும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் 45 நாள்களுக்குள் தீா்வுகாணப்படுகிறது என்பதால் ஏராளமான கூட்டமும் வருகிறது.
இந்நிலையில், மனுக்களுக்கு தீா்வு காண்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமலைராயசமுத்திரம், கறம்பக்குடி, எல்.என். புரம் (அணவயல்), வைரிவயல், பரம்பூா் மற்றும் மாத்தூா் ஆகிய 6 இடங்களில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களை வருவாய்த் துறை அலுவலா்கள் புறக்கணித்தனா்.
மேலும் அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களில் காத்திருப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனா். இதனால் மனுக்களை அளிக்க முடியாமல் மக்கள் அவதிக்கு ஆளாகினா்.
அதன் பிறகு வேறு துறைக பணியாளா்களால் மனுக்கள் பெறப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டன. பல இடங்களில் பதிவேற்றம் செய்ய முடியாமல், அவற்றை அலுவலகங்களுக்கு எடுத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.