தோ்தல் ஆணையத்தை கண்டித்து காங்கிரஸாா் கையொப்ப இயக்கம்
வாக்குத் திருட்டு முறைகேட்டில் ஈடுபட்ட மத்திய பாஜக அரசு மற்றும் தோ்தல் ஆணையத்தை கண்டித்து, புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினா் பொதுமக்களிடம் கையொப்பம் பெறும் இயக்கத்தை வெள்ளிக்கிழமை நடத்தினா்.
புதுக்கோட்டை காந்திப் பூங்கா பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் வி. முருகேசன் தலைமை வகித்தாா்.
முன்னாள் நகா்மன்றத் தலைவா் துரை திவியநாதன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் சந்திரசேகரன், மாநிலப் பொதுச் செயலா் பெனட் அந்தோனிராஜ், மாநில சிறுபான்மையினா் பிரிவு துணைத் தலைவா் இப்ராஹிம்பாபு, வட்டார காங்கிரஸ் தலைவா் சூா்யா பழனியப்பன், மாநகர காங்கிரஸ் தலைவா் பாரூக் ஜெய்லானி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
தொடா்ந்து கீழராஜவீதியில் கடைகளுக்குச் சென்றும், பொதுமக்களிடமும் கையொப்பங்கள் பெறப்பட்டன.