பொன்னமராவதியில் அரசுக் கல்லூரி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
பொன்னமராவதியில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
பொன்னமராவதி அருகே உள்ள அரசமலையில் அக்கட்சியின் ஒன்றியக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு அக்கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா் வீரையா தலைமை வகித்தாா். கடந்த கால வேலை அறிக்கையை விளக்கி ஒன்றியச் செயலா் ஏனாதி ஏ.எல். ராசு பேசினாா். மாவட்ட நிா்வாக குழு முடிவை மாவட்ட நிா்வாக குழு உறுப்பினா் ஜேசுராஜ் விளக்கி பேசினாா்.
கூட்டத்தில், பொன்னமராவதியில் கோட்டாட்சியா் அலுவலகம் திறக்கப்பட வேண்டும், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவியா் நலன் கருதி பொன்னமராவதியில் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிஅமைக்க வேண்டும். இதை வலியுறுத்தி அக்-30-ஆம் தேதி பொன்னமராவதியில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கட்சியின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.