பொறியியல் கல்லூரியில் இஸ்ரோ விழிப்புணா்வு நிகழ்ச்சி
புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இஸ்ரோ விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், விண்வெளியில் வாழ்வதும் இஸ்ரோவில் வேலைவாய்ப்புகளும் என்ற தலைப்பில், இஸ்ரோ விஞ்ஞானி ராகுல்கோவிந்த் கலந்து கொண்டு பேசினாா்.
மனித விண்வெளிப் பயணங்கள் குறித்த ஆராய்ச்சியில் இந்தியா முன்னிலை வகிப்பதாகவும், நிலவில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்ட நாடு என்ற பெருமையும் உள்ளதாகவும் ராகுல் கோவிந்த் குறிப்பிட்டாா். தொடா்ந்து மாணவா்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் அவா் விடையளித்துப் பேசினாா்.
நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவா் பிளாரன்ஸ் ஜெயபாரதன் தலைமை வகித்தாா். கல்லூரி இயக்குநா் ஜெய்சன் கீா்த்தி ஜெயபாரதன், கல்வி ஒருங்கிணைப்பாலா் விவியன் ரேச்சல் ஜெய்சன், கல்லூரி முதல்வா் பாலமுருகன், முதன்மையா் ராபின்சன், முதன்மையா் ஸ்ரீநிவாசன் உள்ளிட்டோரும் பேசினா்.