ஆல் அவுட் ஆனாலும் 339 டார்கெட் வைத்த ஆஸ்திரேலியா; இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இ...
Abhishek Bachchan: பணம் கொடுத்தா விருது வாங்கினேன்?- விளக்கம் அளித்த அபிஷேக் பச்சன்
அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன் 'I Want To Talk' என்ற படத்தில் நடித்ததற்காக பிலிம்பேர் விருதை வென்றார்.
ஆனால் அந்த விருதை அவர் திறமையால் வெல்லவில்லை பணம் கொடுத்தும், பிஆர் வேலைகள் செய்தும்தான் வாங்கினார் என்று சமூக வலைதளங்களில் சர்ச்சை வெடித்தது.
இந்நிலையில் இதுதொடர்பாக அபிஷேக் பச்சன் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் விளக்கம் அளித்திருக்கிறார்.

"ஒரு விஷயத்தை நான் தெளிவாக சொல்லிக்கொள்கிறேன். நான் எந்த விருதையும் PR வேலைகள் செய்தோ, பணம் கொடுத்தோ வாங்கியதில்லை.
நான் செய்ததெல்லாம் கடின உழைப்புதான். ரத்தம், வியர்வை, கண்ணீர் சிந்தியிருக்கிறேன்.
ஆனால் நான் சொல்வதை நீங்கள் நம்பப்போவதில்லை என்றும் எனக்கு தெரியும்.
அதனால் உங்களை அமைதிப்படுத்த சிறந்த வழி என்னவென்றால் இன்னும் கடினமாக உழைப்பதுதான்.

அப்போதுதான் எதிர்காலத்தில் கிடைக்கப்போகும் எந்த விருதையும், நான் செய்யப்போகும் சாதனையையும் நீங்கள் சந்தேகப்படமாட்டீர்கள்.
உங்கள் நினைப்பை நான் தவறென்று நிரூபிப்பேன்" என்று அபிஷேக் பச்சன் பதிவிட்டுள்ளார்.


















