செய்திகள் :

Actor Rajesh: 'நான் மறந்தாலும் அவர் மறக்கமாட்டார்; ஏத்துக்கவே முடியல' - கலங்கிய வடிவுக்கரசி

post image

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களுள் ஒருவர் நடிகர் ராஜேஷ். 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், சின்னத்திரைத் தொடர்களில் நடித்திருக்கிறார்.

நடிப்பதைத் தாண்டி ஜோதிடத்திலும் ஆர்வம் கொண்ட இவர் இன்று( மே 29) உடல் நலக்குறைவால் காலமானார்.

சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் இவருக்கு இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ராஜேஷ்
நடிகர் ராஜேஷ்

ராஜேஷ் சார் ஒரு நல்ல மனிதர்

இந்நிலையில் நடிகர் ராஜேஷ் உடன் பணியாற்றிய நடிகை வடிவுக்கரசியிடம் பேசினோம். ராஜேஷ் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்ட அவர், “ ராஜேஷ் சார் ஒரு நல்ல மனிதர்.

என்னுடையப் பிறந்தநாளை நான் மறந்துவிட்டால் கூட அவருடைய வாழ்த்துதான் முதலில் வரும். நான் எந்தப் படப்பிடிப்பில் இருக்கின்றனோ அங்கு வந்து எனக்கு சால்வை அணிவித்து வாழ்த்தி செல்வார்.

ஒரு முறை  காரைக்குடியில் சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோது என்னை அழைத்துச் சென்று புடவை வாங்கிக் கொடுத்தார். கடைசி நிமிடம் வரை நீங்கள் நடித்துக்கொண்டு இருப்பீர்கள் என்று சொல்வார். 

10 நாட்களுக்கு முன்பு பட்டுக்கோட்டைக்கு சென்று வந்தேன். என் பையனுக்கு பெண் பார்த்துவிட்டோம். ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் கல்யாணம் செய்து வைத்துவிடுவேன் என்று சொன்னார்.

நடிகை வடிவுக்கரசி
நடிகை வடிவுக்கரசி

என் மகன் கல்யாணத்திற்கு நல்ல பட்டுப்புடவை வாங்கி தருகிறேன் என்று சொன்னார். ‘கன்னிப் பருவத்திலே’ படம் வெளியான நாளை வருடம்தோறும் ஞபாகம் வைத்து அது தொடர்பாக என்னிடம் பேசுவார்.

எல்லா விஷயங்களையும் சரியாக செய்யக்கூடியவர். ஒரு நல்ல நண்பர். அவருடைய மறைவை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. என்னால் நம்பவும் முடியவில்லை” என்று கலங்கினார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Saregamapa: "10 லட்சத்தை வச்சு கடன அடைக்கப் போறேன்!" - டைட்டில் வின்னர் திவினேஷ் பேட்டி

‘சரிகமப’ லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4 நிறைவடைந்திருக்கிறது. இந்த சீசனின் டைட்டிலை பலருக்கும் ஃபேவரைட்டான திவினேஷ் தட்டிச் சென்றிருக்கிறார்.திவினேஷ், சரிகமப மேடையிலேயே அதிகளவில் எதுவும் பேசமாட்டார். அப்பா... மேலும் பார்க்க

Jinn - The Pet Review: பேயைச் செல்லப் பிராணியாக வளர்க்கும் நாயகன்; ரசிக்க வைக்கிறதா ஜின்னின் கதை?

வெளிநாட்டிலிருந்து ஊருக்குத் திரும்பும் சக்தி (முகேன் ராவ்), ஒரு மாயப் பெட்டியில் அடைக்கப்பட்ட ‘ஜின்’னுடன் தன் வீட்டுக்கு வருகிறார். அது ஒரு அதிர்ஷ்டப் பேய் என்பது அவரது நம்பிக்கை. பால், பிஸ்கட்டால் ம... மேலும் பார்க்க

ராஜபுத்திரன் விமர்சனம்: அப்பா - மகன் பாசக்கதைதான்; ஆனால் இது ஏமாற்றமளிக்கும் டெம்ப்ளேட் சினிமா!

90களின் தொடக்கத்தில் நடக்கும் கதையில் ஊரில் நன்மதிப்புடையவராக இருக்கிறார் செல்லையா (பிரபு). தன் மகன் பட்ட முத்துவை (வெற்றி) அதீத பாசத்துடன் வளர்க்கிறார். ஒரு காலத்தில் இருந்த குடும்ப சொத்துகள் எல்லாம்... மேலும் பார்க்க