செய்திகள் :

Ajith Kumar: "குறைந்தபட்சம் அவர்களுக்காகவாவது..." - விருது பெற்ற கையோடு பஹல்காம் தாக்குதல் பற்றி AK

post image

நடிகரும், கார் ரேஸருமான அஜித் குமார், நேற்று (ஏப்ரல் 28) டெல்லியில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் திரௌபதி கைகளால் `பத்ம பூஷண்' விருது பெற்றார்.

அதைத்தொடர்ந்து, அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் அஜித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அஜித் குமார் இரங்கல் தெரிவித்து, அனைவரும் வேற்றுமைகளை ஒதுக்கிவைத்து ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

`பத்ம பூஷண்' விருது பெறும் அஜித் குமார்
`பத்ம பூஷண்' விருது பெறும் அஜித் குமார்

`பத்ம பூஷண்' விருது பெற்ற பிறகு ANI ஊடகத்திடம் பேசிய அஜித் குமார், "பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களிடத்தும் என் இதயம் செல்கிறது. இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என்று நம்புகிறேன். அதற்காகப் பிரார்த்தனை செய்கிறேன். அரசாங்கம் தங்களால் முடிந்ததைச் சிறப்பாகச் செய்கிறது என்று நம்புகிறேன். நாம் அனைவரும் வேற்றுமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, அமைதியான சமூகமாக வாழ்வோம்.

ஆயுதப்படையைச் சேர்ந்த பலரை இன்று (ஏப்ரல் 28) நேரில் சந்தித்தேன். அவர்களின் தியாகங்களுக்காக நாம் அனைவரும் அவர்களை வணங்குகிறோம். அவர்கள் கடினமாக உழைப்பதால்தான் நாம் நிம்மதியாக உறங்குகிறோம். அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வேண்டும்.

குடும்பத்துடன் அஜித் குமார்
குடும்பத்துடன் அஜித் குமார்

நமது எல்லைகளைப் பாதுகாப்பதற்காக அயராது உழைக்கிறார்கள். அவர்களின் மரியாதைக்காகவாவது, ஒவ்வொருவரையும், ஒவ்வொருவரின் மதத்தையும் நாம் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். குறைந்தபட்சம் நம் நாட்டுக்குள்ளேயாவது சண்டை வேண்டாம். அமைதியான சமூகமாக நாம் இருப்போம்" என்று கூறினார்.

HIT 3: "எனக்கு ஸ்பைடர் மேன் என்றால் சிவகார்த்திகேயன்; கேப்டன் அமெரிக்கா என்றால் சூர்யா சார்" - நானி

நானி நடித்திருக்கும் 'ஹிட்: தி தேர்டு கேஸ்' (HIT: The Third Case) திரைப்படம் மே 1, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. 'ஹிட்' திரைப்பட யுனிவர்ஸின் மூன்றாவது பாகமாக இது உருவாகியுள்ளது. இதில்... மேலும் பார்க்க

'மனதை உருக்கிய ஒரு படமாக இருந்தது'- `டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தைப் பாராட்டிய தமிழ் குமரன்

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி எனப் பல... மேலும் பார்க்க

Ajith: ``இன்னும் பல வெற்றிகளைப் பெறணும்'' - பத்ம பூஷண் விருது பெற்ற அஜித்தை வாழ்த்திய பவன் கல்யாண்

மத்திய அரசு ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான (2025) விருதுகளைக் கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது. பல துற... மேலும் பார்க்க

Padma Awards: `பத்ம பூஷண்' அஜித்; விருது விழாவில் நெகிழ்ந்த ஷாலினி

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது மத்திய அரசு. அதன்படி இந்த ஆண்டுக்கான விருதுகளை கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது மத்திய அரசு. பல துறைகளிலும் ... மேலும் பார்க்க

இயக்குநர்கள் சசி, ராஜூமுருகன், தரணி ராஜேந்திரன் என அசத்தல் லைன் அப்கள் வைத்திருக்கும் சசிகுமார்

கெட்அப்கள் மாற்றாமல் நடித்தாலும் கூட படத்திற்கு படம் சமூக அக்கறையுடன் கூடிய கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் ஹீரோ சசிகுமார். சமீபத்திய 'அயோத்தி', 'நந்தன்' என பல படங்களை உதாரணாமாக கூற முடியும். அ... மேலும் பார்க்க

Pahalgam Attack: "நம் வலிமையான கரங்களால் நம் இறையாண்மையைப் பாதுகாப்போம்" - விஜய் ஆண்டனி பதிவு

ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் ந... மேலும் பார்க்க