முருங்கை பவுடர், கேப்சூல்,தேநீர்; லாபத்துக்கு வழிகாட்டும் முருங்கை சாகுபடி, மதிப...
Ajith Kumar: ``நன்றிகடன் பட்டுள்ளேன்'' - அஜித் வெளியிட்ட வீடியோ!
நடிகர் அஜித்குமார் துபாயில் நடைபெற்ற மிச்சிலின் துபாய் 24H பந்தையத்தில் Ajith Kumar Racing என்ற தனது சொந்த அணியில் கலந்துகொண்டார்.
இந்த ஆண்டில் கார் பந்தைய சீசன் முமுழுவதும் அஜித் திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை எனத் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்கவுள்ளார்.
மிச்சிலின் துபாய் 24H பந்தையத்தில் அஜித் குமாரின் அணி, போர்ஸ்சே 992 பிரிவில் 3 இடத்தை வென்றது. இந்த வெற்றியை துள்ளி குதித்து கொண்டாடினார் அஜித்.
அஜித் ஓட்டுநராக களமிறங்கி வாகனம் ஓட்டிய போர்ஸ்சே ஜிடி4 பிரிவில் வெற்றி பெறவில்லை என்றாலும், அவரது அணிக்கு 'ஸ்பிரிட் ஆஃப் தி கேம்' விருது வழங்கப்பட்டது.
சினிமா பணிகள் காரணமாக நீண்ட நாள்கள் ரேஸ்களில் பங்கேற்காமல் இருந்தப் அஜித், இந்த பந்தையத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டார்.
பந்தையத்தில் பங்கேற்க உதவியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனது சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவரது வீடியோவில், "பந்தைய கண்காணிப்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் துபாய் ஆட்டோட்ரோம் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி.
நான் என்னுடைய அஜித் குமார் ரேசிங் அணிக்கும் கடமைபட்டுள்ளேன். நாங்கள் உங்களது ஆதரவு, வாழ்த்துகள் மற்றும் விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். உங்கள் எல்லாருக்கும் வாழ்த்துகள், உங்கள் அழகான குடும்பங்களை விரைவில் சந்திப்போம் என நம்புகிறேன். உங்கள் நலனைப் பார்த்துக்கொள்ளுங்கள்" எனப் பேசினார்.