Aliens: ``வேற்றுகிரக வாசிகள் வாழும் ஒரு கோள்.." -ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வு சொல்வதென்ன?
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நமது சூரிய மண்டலத்துக்கு வெளியே பூமியை விட ஆறு மடங்கு பெரிய 'சூப்பர் எர்த்' எனும் கோளை கண்டுபிடித்திருக்கிறது. இது தொடர்பாக பேசிய பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் முதுகலை ஆராய்ச்சி உதவியாளரான டாக்டர் மைக்கேல் கிரெட்னிக்னியர், ``பூமியின் ஆறு மடங்கு நிறை கொண்ட HD 20794 d என்ற வெளிப்புற கோள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கோளின் வெளிப்புறத்தில் திரவம் சூழ்ந்திருக்கும் என நம்புகிறோம்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-12/lm6xms4m/GjixppjaIAQKGyC.jpg)
பூமியிலிருந்து 20 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் இந்தக் கோளில் வேற்றுகிரக வாசிகள் வாழ்வதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. அந்த கிரகமும் நமது சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திர மண்டலத்திற்குள் சுற்றி வருகிறது. அந்தக் கோள் நமக்கு அருகாமையில் இருப்பது, எதிர்காலத்தில் அதன் ரகசியங்களை கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. சுமார் 20 ஆண்டுகால ஆராய்ச்சியின் முடிவில் இது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. நீள்வட்டப் பாதையில் சுற்றும் இந்தக் கோளின் அடுத்தக்கட்ட ஆராய்ச்சிகள் தொடங்கப்பட்டிருக்கிறது." என்றார்.