செய்திகள் :

AMARAN: இராணுவ அதிகாரிகளுக்குப் பிரத்தியேகமாக திரையிடப்பட்ட 'அமரன்' - குவியும் பாராட்டுகள்!

post image
கமல்ஹாசன் தயாரித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் திரைப்படம் `அமரன்'. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான இதில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார்.

தேசத்திற்காக உயிரைத் தியாகம் செய்து, தேசமே சல்யூட் அடித்த மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடித்த்திருக்கிறார், அவரின் மனைவியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். தேசப் பற்று மிக்க இராணுவ வீரரின் எல்லையற்ற அன்பு, தேசப் பற்று, தியாகம், வீரம், அவரது குடும்பம் பற்றிய உணர்வுப்பூர்வமான உண்மைக் கதையைச் சொல்லும் இத்திரைப்படம் தீபாவளிக்குத் திரைக்காணவிருக்கிறது.

அமரன்

இந்நிலையில் டெல்லியில் நேற்று (அக்டோபர் 24) இராணுவ அதிகாரிகளுக்குப் பிரத்தியேகமாகத் திரையிடப்பட்டிருக்கிறது 'அமரன்' திரைப்படம். படத்தைப் பார்த்த இராணுவ அதிகாரிகள் மனம் நெகிழ்ந்து படக்குழுவைப் பாராட்டியிருக்கின்றனர். மேலும், இது ஒவ்வொரு இராணுவ வீரரின் கதை என்றும் மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு செய்யப்பட்ட மரியாதை இப்படம் என்றும் உணர்ச்சிகரமாகப் பாராட்டியிருக்கின்றனர். இப்படத்தைப் பார்த்த மணிஷாரதி என்பவர், "அமரன் திரைப்படத்தைப் படத்தை அதன் வெளியீட்டிற்கு முன்பே பிரத்தியேகமாகப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் தேசப்பற்று, தியாகத்தைத் திரையில் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது. இப்படம் அவரின் தியாகத்திற்கு செய்யும் ஒரு மரியாதை. நல்ல இயக்கம், நடிப்பு. நடிகர் சிவகார்த்திகேயன் திறமையான, தன்னடக்கம் கொண்ட நல்ல நடிகர். மேஜர் முகுந்த் வரதராஜன் கொண்டாடப்படுவார். இந்திய இராணுவத்திற்கு ஒரு சல்யூட்" என்று நெகிழ்ச்சியாகப் பாராட்டியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Vijay TVK: 2G, Time To Lead, விவசாயப் பிரச்னை - விஜய்க்கு அரசியல் இமேஜ் கொடுத்த 5 படங்கள்

'நாளைய தீர்ப்பு' படத்தில் கதாநாயகனாக ஆரம்பித்த பயணம் லவ்வர் பாய், ஆக்ஷன் ஹீரோ, வசூல் நாயகன், இளைய தளபதி , தளபதி என அடுத்தடுத்த கட்டங்களை எட்டி இப்போது கட்சித் தலைவர் என்ற நிலையை எட்டி இருக்கிறார் விஜய... மேலும் பார்க்க

Simbu: ஆட்டத்துக்கு ரெடியான சிம்பு; 'STR49' படப்பிடிப்பு எப்போது? அசத்தும் `STR50' அப்டேட்!

மீண்டும் அதிரடி ஆட்டத்திற்கு ரெடியாகிவிட்டார் சிம்பு. சமீபத்தில் அவரது 49வது படம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ''Zen G தலைமுறை கொண்டாடும் வகையில், விண்டேஜ் எஸ்.டி.ஆரின் அனைத்து மேனரிசங்களுடன், இளமை துள்ள... மேலும் பார்க்க

Surya: `சூப்பர் ஸ்டார்' என அழைத்த தொகுப்பாளர்; சூர்யா அளித்த பதில்; கொண்டாடும் ரசிகர்கள்!

தொகுப்பாளர் ஒருவர் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டதற்கு சூர்யா அளித்துள்ள பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.சூர்யா நடிப்பில் `சிறுத்தை' சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் `கங்குவா'. மிகப் பி... மேலும் பார்க்க

Lucky Baskhar: "4 மொழி, 40 நாள் டப்பிங், ராம்கியுடனான அனுபவம்" - சுவாரஸ்யம் பகிரும் துல்கர் சல்மான்

வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சௌத்ரி, ராம்கி நடிப்பில், ஜீவி பிரகாஷ்குமார் இசையில் உருவாகி உள்ள திரைப்படம் 'லக்கி பாஸ்கர்'.இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 31... மேலும் பார்க்க