Anmol: ``இந்த எருமையை ரூ.23 கோடிக்கு கேட்டார்கள்..'' - ராஜஸ்தான் கண்காட்சியில் வினோதம்!
ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் சர்வதேச கால்நடை கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில் பார்வைக்கும், விற்பனைக்கும் கொண்டுவரப்பட்டிருந்த ஒட்டகங்கள், எருமைகள், குதிரைகளைப் பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள், குறிப்பாக வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.
அந்த கண்காட்சியில் வைக்கப்பட்ட ஒரு எருமை மாடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. ஹரியானாவின் சிர்சா மாவட்டத்தில் உள்ள ஹிசு கிராமத்தைச் சேர்ந்தவரான பல்மிந்த்ரா கில் என்பவருக்கு சொந்தமான அன்மோல் என்ற அந்த எருமை மாடு, சுமார் 1500 கிலோ எடையில் இருக்கிறது.
8 வயதான அந்த எருமை மாடு அன்மோலின் என அழைக்கப்படுகிறது. அது குறித்துப் பேசிய அதன் உரிமையாளர், ``அன்மோலின் எருமை மாட்டுக்கு ஒரு நாளுக்கு ரூ,1000 முதல் 1500 வரை செலவாகிறது. இதன் தாய் எருமை ஒருநாளுக்கு 25 லிட்டர் வரை பால் கொடுத்து சாதனை படைத்தது. ஆனால், அதற்கான செலவை செலவை சமாளிக்க முடியாமல்தான், கன்றை வைத்துக்கொண்டு தாய் எருமையை விற்றுவிட்டோம். அந்த கன்றுதான் இன்று பார்வைக்கு நிற்கிறது. பழங்கள் முதல் உலர் தானியங்கள் வரை அனைத்தையும் அன்மோல் சாப்பிடும். அதன் தீனியில் முட்டை, சோளம், சோயாபீன், நெய், பால், எண்ணெய், பசுந்தீவனம் ஆகியவற்றைக் கலந்துதான் கொடுக்கிறோம்.
அன்மோலின் விந்துக்கு அதிக சக்தி இருக்கிறது. அதன் விந்து வாரத்திற்கு இரண்டு எடுக்கப்படுகிறது. விந்து எடுக்கப்பட்டவுடன், 300 முதல் 900 எருமைகளுக்கு செலுத்தப்படும். அன்மோலின் விந்துவின் தரமும், அதிக தேவைக்கு மற்றொரு காரணம்.
அதன் விந்துவை, கால்நடை வளர்ப்போருக்கு, 250 ரூபாய்க்கு விற்கிறேன். அனைத்துக் கண்காட்சிக்கும் அன்மோலைக் கொண்டு செல்வேன். அன்மோலுக்கு நான் செய்யும் செலவை, இது போன்ற வியாபாரம் மூலம் அது மீண்டும் எனக்கே தந்துவிடுகிறது. கடந்த ஆண்டு உத்தரபிரதேசத்தில் நடந்த கண்காட்சிக்கு அன்மோலை அழைத்துச் சென்றபோது, தொழிலதிபர் ஒருவர் ரூ.23 கோடிக்கு அன்மோலை விலைக்கு கேட்டார். ஆனால் நான் அன்மோலை விற்க விரும்பவில்லை." எனக் குறிப்பிட்டார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb