செய்திகள் :

Army: லடாக் பனிமலை அதிகாரி டு வெலிங்டன் ராணுவ கல்லூரி கமாண்டென்ட்; யார் இந்த மணீஸ்யெரி?

post image

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள வெலிங்டன் பகுதியில் நூற்றாண்டு பழைமை வாய்ந்த ராணுவ பயிற்சி மையம் இயங்கி வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சியின் போது 'மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டர்' என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த ராணுவ பயிற்சி மையம் இந்திய ராணுவத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது.

ராணுவ பயிற்சி மையத்தின் அருகிலேயே முப்படை அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரியும் இயங்கி வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகளுக்கும் இங்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. வெலிங்டன் ராணுவ மையத்தின் கமாண்டென்ட் பதவி இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ பதவிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

ராணுவ அதிகாரிகள்
ராணுவ அதிகாரிகள்

கடந்த 3 ஆண்டுகளாக கமாண்டென்ட் பதவி வகித்து வந்த லெஃப்ட்டினல் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ்ஸின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், லெஃப்டினல் ஜெனரல் மணீஷ்யெரி புதிய கமாண்டென்ட்டாகப் பொறுப்பேற்றுள்ளார்.

கமாண்டென்ட் லெஃப்ட்டினல் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் தன்னுடைய பொறுப்பை மணீஷ்யெரியிடம் ராணுவ பாரம்பர்ய முறைப்படி ஒப்படைத்துள்ளார்.

புதிதாகப் பதவியேற்றிருக்கும் கமாண்டென்ட் மணீஷ்யெரி குறித்து தெரிவித்த ராணுவத்தினர், "டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியின் முன்னாள் மாணவரான மணீஷ்யெரி, 1988 -ல் காஷ்மீர் ராணுவ, 9- வது காலாட்படைக்கு நியமிக்கப்பட்டார். வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியிலும் முன்னாள் மாணவர்தான் இவர்.

ராணுவ அதிகாரிகள்
ராணுவ அதிகாரிகள்

37 ஆண்டுகளாக ராணுவ சேவையாற்றி வரும் இவர், கிழக்கு லடாக்கில் உள்ள சுஷுல்ஹில் பனிமலை பகுதிகளில் பட்டாலியன் பிரிவுக்கு கட்டளை அதிகாரியாகவும் பதவி வகித்து வந்தார். தற்போது வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியின் கமாண்டென்ட்டாக பதிவியேற்றிருக்கிறார்" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

``பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறக் காரணம் இதுதான்; டிசம்பரில் நல்ல செய்தி'' - டிடிவி தினகரன்

மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன், கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து விலகுவதாக வெளிப்படையாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து பாஜக தலைமையிலான... மேலும் பார்க்க

TVK: விஜய் வீட்டின் மாடியில் புகுந்த இளைஞர்; பலத்த பாதுகாப்பை மீறி சென்றது எப்படி? -போலீசார் விசாரணை

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் நீலாங்கரை வீட்டில் மொட்டை மாடியில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் இருந்துள்ளார். பலத்த பாதுகாப்பையும் மீறி, மாடியில் இளைஞர் ஒருவர் அமர்ந்திருந்ததைப் பார்த்து விஜ... மேலும் பார்க்க

பழனி: பழங்குடி மக்களின் துயரத்தை எடுத்துரைத்த ஜூ.வி... வீடு கட்டும் ஆணை பிறப்பித்த அரசு நிர்வாகம்!

பழனியில் உள்ள மண் திட்டில் பகுதியில் வசிப்பதற்கு வீடில்லாமல் கிழிந்த தார்பாய்களால் பெரும் சிரமத்துடன் வசிப்பதாக ஜுனியர் விகடன் இதழில் செய்தி வெளியிட்டு இருந்தோம். இந்த செய்திக்காக மாவட்ட ஆட்சியர் சரவண... மேலும் பார்க்க

Kamal: "திமுக கூட்டணியில் சேர்ந்து விட்டேனா?"- கமல் சொன்ன பதில்

2018ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யத்தைத் தொடங்கிய கமல்ஹாசன், 4 ஆண்டுகளுக்கு முன்பு 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தார். இதையடுத்து அவரது கட்சியிலிருந்து பலர... மேலும் பார்க்க

தென்காசி: "வனத்துறை மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்" - விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு

தென்காசி மாவட்டம், தென்காசி கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் தென்காசி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் லாவண்யா பால் தலைமையில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் தென்காசி கோட்ட... மேலும் பார்க்க

Youtube: யூடியூப் சேனல்களுக்கும் லைசென்ஸ் அவசியம்; கர்நாடக அரசின் திட்டமும், தர்மஸ்தலா பின்னணியும்?

கர்நாடக மின்னணு ஊடகப் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, டிவி சேனல்களைப் போலவே யூடியூப் செய்தி சேனல்களும் அரசிடம் இருந்து உரிமம் பெற்றே செயல்பட அனுமதிக்கும் முறையைக் கொண்டுவர கர்நாடக அரசு ... மேலும் பார்க்க