செய்திகள் :

Ashwath Marimuthu: `நினைவில் கொள்ள வேண்டிய தருணம் இது' - அஸ்வத் மாரிமுத்துவின் நெகிழ்ச்சிப் பதிவு

post image

கடந்த மாதம் வெளியான `டிராகன்' திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு 100 கோடி வசூலையும் அள்ளியது. இயக்குநராக சினிமாவில் அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் `லவ் டுடே', `டிராகன்' என இரண்டு திரைப்படங்களிலும் நடிகராக உருவெடுத்து முத்திரைப் பதித்திருக்கிறார். நடிகர்களாக மாறிய இயக்குநர்களை வைத்து இயக்குவது எப்போதும் அப்படத்தின் இயக்குநர்களுக்கு ஸ்பெஷலான விஷயம்தான். இப்படியான அனுபவத்தை பல முன்னணி இயக்குநர்களும் பல பேட்டிகளில் பகிர்ந்திருக்கிறார்கள். `டிராகன்' திரைப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார், கெளதம் மேனன், மிஷ்கின், பிரதீப் ரங்கநாதன் என மொத்தமாக நான்கு இயக்குநர்களை வைத்து இயக்கியிருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து. அதிலும் இதுவரை நாம் பார்த்திடாத கெளதம் மேனனின் நடனத்தையும் இத்திரைப்படத்தில் அஸ்வத் மாரிமுத்து காட்சிப்படுத்தியிருந்தார். படத்தின் மையக்கருவும் மிஷ்கினின் கதாபாத்திரம் சார்ந்தே நகர்ந்திருந்தது.

இது குறித்து பதிவிட்டிருக்கும் அஸ்வத் மாரிமுத்து, `` நினைவில் கொள்ள வேண்டிய தருணம் இது. நடிகர்களாக மாறிய வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்த நான்கு தனித்துவமான இயக்குநர்களை வைத்து இயக்கியது அழகான ஒன்று!" எனப் பதிவிட்டிருக்கிறார். `டிராகன்' படத்தை தயாரித்த இதே ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து தன்னுடைய அடுத்த படத்தை சிம்புவை கதாநாயகனாக வைத்து இயக்கவிருக்கிறார். இது சிம்புவின் 51-வது படம் என்பது குறிப்பிடதக்கது.

DILLI RETURNS: லோகேஷுக்கு கைதியின் பிறந்தநாள் பரிசு; சர்ப்ரைஸ் தர காத்திருக்கும் பார்ட் 2 அறிவிப்பு

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், தனது இரண்டாவது படைப்பான கைதி படத்தில், ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை சினிமாட்டிக் விருந்தாக வைத்து சினிமா ரசிகர்களை தன்மீத... மேலும் பார்க்க

'முதல் இடத்துக்கு நம்மதான் ஜி வருவோம்னு அன்னைக்கே சொன்னாரு..' - அஜித் குறித்து நெகிழ்ந்த லிங்குசாமி

ஆனந்த விகடன் யூடியூப் சேனலில் ஒளிபரப்பாகும் 'கதைப்போமா வித் பர்வீன் சுல்தானா' நிகழ்ச்சியில் இயக்குநர் லிங்குசாமி கலந்துகொண்டு, பல விஷயங்கள் குறித்துப் பகிர்ந்திருக்கிறார். அந்தப் பேட்டியில் சினிமாக் ... மேலும் பார்க்க

மாடன் கொடை விழா விமர்சனம்: ஆர்வமூட்டும் களம்; இயல்பான நெல்லை கிராமம்; ஆனால் படமாகக் களைகட்டுகிறதா?

சில வருடங்களாகத் தடைப்பட்டிருக்கும் சுடலை மாடன் சாமியின் கொடை விழாவை நடத்திவிட வேண்டும் என முடிவெடுக்கும் நாயகனின் போராட்டமே இந்த 'மாடன் கொடை விழா'.சில ஆண்டுகளுக்கு முன்பு கொடை விழா சமயத்தில் தெருக்கூ... மேலும் பார்க்க

'புதிதாக வருபவர்களுடன் போட்டிபோடும் இடத்தில் இருக்கிறார் வெற்றிமாறன்..!' - நெகிழ்ந்த லிங்குசாமி

ஆனந்த விகடன் யூடியூப் சேனலில் ஒளிபரப்பாகும் 'கதைப்போமா வித் பர்வீன் சுல்தானா' நிகழ்ச்சிக்கு இயக்குநர் லிங்குசாமி பேட்டிக் கொடுத்திருக்கிறார். அந்தப் பேட்டியில் சினிமா குறித்து பல விஷயங்களைப் பகிர்ந்தி... மேலும் பார்க்க

Vijay: ``ஜனநாயகன்ல நடிக்கிறேன்; விஜய் சார் ரகசியமாக பண்ற வேலை அது'' - பாபா பாஸ்கர்

உற்சாகத்துக்குப் பஞ்சமில்லாதவர் நடன இயக்குநர் பாபா பாஸ்கர். நடன நிகழ்ச்சிகளின் நடுவர், திரைப்படங்களுக்கு நடன அமைப்பு, நடிப்பு என பரபரப்பாக இருப்பவர். சந்திக்கச் சென்றால், துறு துறு உடல்மொழியுடன் பம்பர... மேலும் பார்க்க

Kayadu Lohar: கயாடு லோஹர் நடித்திருக்கும் இந்தத் திரைப்படங்களைப் பார்த்திருக்கிறீர்களா?

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ’டிராகன்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்தப் படத்தில் பல்லவி கதாபாத்திரத்தில் நடித்த கயாடு லோஹர் சமூக வலைதளங்களில் சென்சேஷன் ஆகியிர... மேலும் பார்க்க