சிறகடிக்க ஆசை மீனா குறித்து வருத்தம் தெரிவித்த எதிர்நீச்சல் இயக்குநர்!
சென்னை ஐசிஎஃப் ஹைப்பர்லூப் திட்டம்: "விரைவில் இந்தியாவில் ஹைப்பர்லூப் போக்குவரத்து" -அஸ்வினி வைஷ்ணவ்
மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சென்னை தையூரில் உள்ள ஐ.ஐ.டிக்கு நேற்று வந்திருந்தார். அங்கே ஹைப்பர்லூப் திட்டத்திற்கான எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தைப் பார்வையிட்ட அவர் பேசியதாவது...
"சென்னை ஐஐடி வளாகத்தில் அமைந்துள்ள இந்த 410 மீட்டர் நீளமுள்ள ஹைப்பர்லூப் சோதனை குழாய்தான் ஆசியாவிலேயே மிக நீண்ட ஹைப்பர்லூப் சோதனையமைப்பு ஆகும். ஹைப்பர்லூப் போக்குவரத்துக்கான சோதனை அமைப்பு முழுவதும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக நமது இளம் கண்டுபிடிப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தற்போது வளர்ந்துவரும் இந்த ஹைப்பர்லூப் போக்குவரத்து தொழில்நுட்பம், இதுவரையிலான சோதனைகளில் நல்ல பலன்களைத் தந்துள்ளன. இதனால், விரைவில் ஹைப்பர்லூப் போக்குவரத்துக்கு இந்தியாவில் தயாராகிவிடும்.
இந்த ஹைப்பர்லூப் திட்டத்திற்காக மத்திய அரசின் ரயில்வே அமைச்சகம் நிதி உதவியும், தொழில்நுட்ப உதவியும் வழங்கி வருகின்றன. இனி இந்த ஹைப்பர்லூப் திட்டத்திற்கான எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம் முழுவதும் சென்னை ஐசிஎஃப்- ல் மேம்படுத்தப்படும். ஐசிஎஃப் தொழிற்சாலையில் திறமையான வல்லுநர்கள் வந்தே பாரத் அதிவிரைவு ரயில்களுக்கான பெரிய சவாலான அதிக திறனுள்ள எலக்ட்ரானிக்ஸ் அமைப்புகளைத் திறம்பட மேம்படுத்தியுள்ளனர். அதேபோல, இந்த ஹைப்பர்லூப் திட்டத்திற்கான எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பமும் ஐசிஎஃப்-ல் மேம்படுத்தப்படும்.
















பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா அனைத்து துறைகளில் முன்னணியில் இருக்கும் நாடாக விளங்குகிறது. தரவு அறிவியல், செயற்கை தொழில்நுட்பம் மற்றும் செமி கண்டக்டர் ஆகிய துறைகளில் நமது இளைஞர்கள் திறமையாகச் செயல்பட்டு வருகிறார்கள். உலகிலேயே இந்தியாவில்தான் திறமையான இளைஞர்கள் அதிகம் இருக்கிறார்கள். இவர்கள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றப் பெரிதும் பங்காற்றுவார்கள். இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவில் தயாரான முதலாவது செமி கண்டக்டர் பயன்பாட்டிற்கு வரும்" என்று கூறினார்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks