Railway Exam: "தமிழக தேர்வர்களுக்கு 1,500 கிமீக்கு அப்பால் தேர்வு மையம்" - சு.வெங்கடேசன் கண்டனம்
ரயில்வே தேர்வு வாரியம் (RRB) மூலம் நடத்தப்படும் ஏ.எல்.பி (Assiaitant Loco Pilot) பணிக்கான தேர்விற்கு விண்ணப்பித்த தமிழகத்தைச் சேர்ந்த 80 சதவீதம் தேர்வர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏ.எல்.பி பதணிக்கு தமிழ்நாட்டில் 5696 காலிப் பணியிடங்கள் இருப்பதாக கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்விற்குத் தமிழ்நாட்டிலிருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர். CBT 1 எனப்படும் முதற்கட்ட கணினி முறைத் தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் 25 முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். CBT 2 எனப்படும் இரண்டாம் கட்ட கணினி முறைத் தேர்வுகள் இந்த மாதம் 19 ஆம் தேதி நடைபெறவிருக்கின்றன.
தேர்விற்கான ஹால் டிக்கெட்டை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் 80 சதவிகிதம் பேருக்குத் தேர்வு மையம் வெளி மாநிலங்களில் அமைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தேர்வு மையம் அமைத்து தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் எனப் போட்டித் தேர்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய ரயில்வே அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ள கடிதத்தில், "ரயில்வே தேர்வு வாரியம் நடத்தும் லோகோ பைலட்டுக்கான தேர்வுக்குத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கான தேர்வு மையங்கள் 1500 கீலோ மீட்டர் தொலைபில் அமைந்த்துள்ளதால், தேர்வு மையங்களைத் தமிழ்நாட்டிற்குள் மாற்றித் தருவதற்குத் தலையிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
ரயில்வே தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் லோகோ பைலட் காலி இடங்களுக்கான CBT 2 தேர்வுக்கு 6000-க்கும் மேலானவர்கள் CBT 1 தேர்ச்சி பெற்று தமிழ்நாட்டிலிருந்து தகுதி பெற்றுள்ளார்கள். இத்தேர்வு எதிர்வரும் மார்ச் 19, 2025 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு மையங்கள் அதிகமான தேர்வர்களுக்குத் தமிழ்நாட்டிற்கு வெளியே அறிவிக்கப்பட்டுள்ளது. பலர் ஆயிரம் கிலோ மீட்டர் கடந்து தெலுங்கானா வரை செல்ல வேண்டியுள்ளது. இதனால் தேர்வர்கள் நிதிச் சுமைக்கும், கடுமையான அலைச்சலுக்கும் ஆளாகும் நிலை உள்ளது. மதுரை நாடாளுமன்றத் தொகுதியைச் சார்ந்த பல தேர்வர்களின் பெற்றோர் என்னை அணுகி தேர்வு மையங்களைத் தமிழ்நாட்டிற்குள் மாற்றித் தருவதற்குத் தலையிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

ஆகவே தேர்வு மையங்களை மாற்றுவதற்கு உடனடியாகத் தலையிடுங்கள்" என்று கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks