`ரிதன்யா வழக்கில் தொய்வு; விசாரணை அதிகாரி மீது சந்தேகம்' - மேற்கு மண்டல ஐ.ஜி-யிட...
Axiom-4 mission: பூமி திரும்பும் சுபான்ஷு சுக்லா குழு; உற்சாக வரவேற்பு அளிக்க நாசா ஏற்பாடு
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவுடன் இணைந்து 2025-ல் `ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4' என்ற திட்டத்தை செயல்படுத்தியது. அதன்படி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வீரர்களை அனுப்ப திட்டமிடப்பட்டது.
இந்த திட்டத்தின் முக்கிய பைலட்டாக இந்திய விமானப்படையில் அனுபவம் வாய்ந்த விமானியான சுபன்ஷு சுக்லா இருக்கிறார்.

இந்தியாவைச் சேர்ந்த குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா மற்றும் அவரது மூன்று குழு உறுப்பினர்களுடன் ஜூன் 25 ஆம் தேதி ஆக்ஸ்-4 வெற்றிகரமாக விண்வெளியில் பாய்ந்தது.
இந்தியாவின் இரண்டாவது விண்வெளி வீரரும், சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த முதல் இந்தியருமான சுபான்ஷு சுக்லா, 14 நாள் பயணத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) வடிவமைத்த 7 மைக்ரோகிராவிட்டி ஆய்வுகளை மேற்கொண்டார்.
இந்த ஆய்வுகள், தாவர உயிரியல், தசை ஆரோக்கியம் மற்றும் மைக்ரோபயாலஜி ஆகியவற்றை உள்ளடக்கியவை. மேலும், நாசா மற்றும் ISRO இணைந்து 5 அறிவியல் ஆய்வுகளையும், இரண்டு STEM ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர்.
இந்தக் குழு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் 60-க்கும் மேற்பட்ட ஆய்வுகளை முடித்து, உலகளாவிய விண்வெளி ஆராய்ச்சிக்கு பங்களித்திருக்கிறது.

இந்நிலையில் ஜூலை 14 ஆம் தேதி சுபான்ஷு சுக்லா மற்றும் ஆக்சியம்-4 பயணக் குழுவினர், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு திரும்ப உள்ளனர்.
மேலும் குழுவினரை உற்சாகமாக வரவேற்க நாசா ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த பயணம், இந்தியாவின் ககன்யான் மனித விண்வெளி திட்டத்திற்கு முக்கியமான அனுபவத்தை வழங்கி இருக்கிறது என்பது குறிப்பிடதக்கத்து.