செய்திகள் :

`Baakiyalakshmi சீரியலில் இப்ப கோபிக்கு விவாகரத்து கொடுத்ததால..!' - ரேஷ்மா பசுபலேட்டி ஷேரிங்ஸ்

post image

சின்னத்திரை, வெள்ளித்திரையில் பரிச்சயமானவர் ரேஷ்மா பசுபலேட்டி. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `பாக்கியலட்சுமி' தொடரிலும், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் `கார்த்திகை தீபம்' தொடரின் இரண்டாம் பாகத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அவரை சந்தித்துப் பேசினோம்.

ரேஷ்மா பசுபலேட்டி

" `பாக்கியலட்சுமி' ராதிகா கேரக்டர் இப்ப 4 வருஷமாகிடுச்சு. கேரக்டர் பழகிடுச்சு. சீரியலில் இப்ப நான் கோபிக்கு விவாகரத்து கொடுத்துட்டேன். இப்ப அந்த சீரியலில் அப்பப்ப தான் வர்றேன். இன்னும் சீரியல் எத்தனை நாள் போகும்னு எங்களுக்கே தெரியல. கதையைப் பொறுத்தவரைக்கும் இப்ப நான் விவாகரத்து கொடுத்துட்டேன்!" என பாக்கியலட்சுமி தொடர் குறித்துக் கேட்டதற்கு பதில் அளித்திருந்தார். அவரிடம் `கார்த்திகை தீபம்' குறித்து கேட்கவும்,

"`கார்த்திகை தீபம்' தொடருக்கு கிடைச்ச வரவேற்பு நல்லா இருந்தது. இதுல எனக்கு கொஞ்சம் டஃப் ஆன ரோல். கார்த்திக் சார் கூட நடிக்கிறேன். வடிவுக்கரசி அம்மா கூட நிறைய காம்பினேஷன் சீன்ஸ் வரும். சில சீனெல்லாம் அவங்ககிட்ட சொல்றதுக்கே தயங்குவேன். டைரக்‌டர் சார் தான் இது நடிப்பு தான்மா நடிங்கன்னு சொல்லுவார்.

மேடம் கூட நடிக்கிறதே பெரிய விஷயமா நினைக்கிறேன். அவங்க பார்க்க கொஞ்சம் டஃப் ஆக இருப்பாங்க.. ஆனா ரொம்ப சாப்ட் ஆன பர்சன். அது நிறைய பேருக்கு தெரியாதுன்னு நினைக்கிறேன். ஆனா, இன்டஸ்ட்ரியில் அத்தனை வருஷம் இருக்கணும்னா அப்படி ஆகிடுவாங்க!" என்றார்.

பர்சனல் லைஃப் வச்சு நிறைய விமர்சனங்கள் வரும் போது அதை எப்படி எதிர்கொள்வீங்கன்னு கேட்கவும், `நான் அதுக்கெல்லாம் பெருசா எனர்ஜி கொடுக்கிறது இல்ல. நம்ம ரியாக்ட் பண்ணனும்னு தான் அவங்க நெகட்டிவ் கமென்ட் பண்றாங்க. நான் அதுக்கெல்லாம் ரியாக்ட் பண்றதே இல்ல. நான் லிப் சர்ஜரியெல்லாம் பண்ணல. சர்ஜரி பண்ற அளவுக்கு எனக்கு தைரியம் இல்ல.

நம்ம லைஃப்ல பாசிட்டிவ் டிரான்ஸ்ஃபர்மேஷன் எப்பவும் கொடுத்துட்டே இருக்கணும். மீடியாவில் இருக்கும் போது நம்ம ஃபியூச்சருக்கு ஏத்த மாதிரி அடாப்ட் பண்ணி தான் ஆகணும். முன்னாடியெல்லாம் பியூட்டி பார்லர் மட்டும் தான் இருந்தது. இப்ப நிறைய ஸ்கின் கிளினிக் வந்துடுச்சு. செலிபரிட்டிகள் தாண்டி மக்களே நிறைய அந்த ட்ரீட்மென்ட் பண்ணிட்டிருக்காங்க. அது பண்றதெல்லாம் தப்பே இல்ல. லைஃப் ஒரு தடவை தான். உங்க லைஃப்பை என்ஜாய் பண்ணி வாழுங்க!" எனப் புன்னகைத்தார். 

இன்னும் பல விஷயங்கள் குறித்து ரேஷ்மா நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!

Siragadikka Aasai : ரோகிணி சிக்கியது கனவா? நிஜமா? - பரபர புரொமோ

சிறகடிக்க ஆசை சீரியலில் இந்த வாரத்திற்கான புரொமோவில் ரோகிணி பற்றிய உண்மைகளை மணி வீட்டில் சொல்லிவிடுகிறார்.கடந்த எபிசோடில் முத்து-மீனா மண்டபத்தில் இருந்த மோசடி தம்பதியை கண்டுபிடித்துத் துரத்துகின்றனர்.... மேலும் பார்க்க

ரோபோ சங்கர் பேரனுக்கு பெயர் வைத்த கமல்ஹாசன்; இந்திரஜாவின் நெகிழ்ச்சிப் பதிவு

`பிகில்' திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானவர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா. திரைப்படங்களில் நடித்து வந்த இவர் கார்த்திக் என்பவரை கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிற... மேலும் பார்க்க

Baakiyaalakshmi : `கதாபாத்திரத்தை புரிஞ்சுகோங்க பாஸ்'- மாஸ் காட்டிய இனியா; அதிர்ந்து போன குடும்பம்

பாக்கியலட்சுமி சீரியலில் இனியா கதாபாத்திரம் ஆரம்பத்தில் இருந்தே கொஞ்சம் நெகடிவ்வாக சித்தரிக்கப்பட்டு வந்தது. டீன் ஏஜ் பெண்ணான இனியா அடிக்கடி ரிலேஷன்ஷிப் பிரச்னைகளில் மாட்டிக்கொள்வார். நண்பர்களுடன் பார... மேலும் பார்க்க

`சிறகடிக்க ஆசை டு பாஸ் (எ) பாஸ்கரன் ரிலீஸ் வரை' - அனுபவங்கள் பகிரும் குரு சம்பத்குமார்

ஹீரோக்களின் நண்பனாய் சந்தானம் காமெடியில் ரகளை செய்த படங்களுக்கு மீண்டும் மீண்டும் வரவேற்பை அள்ளும் சீஸன் இதுபோல. 12 ஆண்டுகளுக்குப் பிறகு 'மதகஜராஜா' ரிலீஸ் ஆகி வரவேற்பைப் பெற்றதால், சந்தானத்துடன் இணைந்... மேலும் பார்க்க

Ayyanar Thunai: இது தரமான ப்ரோபோசல்... வாயடைத்துப் போன சேரன்; திடீர் கல்யாணத்தில் பரபர!

தன் சகோதரர்களுடன் வாக்குவாதம் செய்த பின்னர் சோழன் ரிசப்ஷனுக்கு சம்மதிக்கிறார். 'அய்யனார் துணை' சீரியலின் நேற்றைய எபிசோடில் சோழன் - நிலா ரிசப்ஷனுக்காக வீட்டில் அனைவரும் மும்முரமாக ஏற்பாடுகள் செய்கின்றன... மேலும் பார்க்க

நடிப்பை விட்டுட்டு சொந்த ஊருக்கே போயிட்டேனா? `சரவணன் மீனாட்சி' இர்ஃபான்|இப்ப என்ன பண்றாங்க பகுதி -1

ஒரு காலத்தில் ஸ்க்ரீனில்பிஸியாக இருந்து ரசிகர்களாலும் கவனிக்கப்பட்டவங்கஇவங்க. விரும்பி பிரேக் எடுத்தாங்களா, சூழ்நிலையா தெரியாது.. இப்போது மேக்-அப், ஷூட்டிங் என எந்தப் பரபரப்புமின்றி இருக்கிறார்கள். 'இ... மேலும் பார்க்க