அம்பேத்கர் விவகாரத்தில் காங்கிரஸ் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும்: நட்டா
Bala 25 : `பொங்கலுக்கு அஜித் சார் படம் வருது; பாலா சாரின் வணங்கான் படமும் வருது' - சிவகார்த்திகேயன்
இயக்குநர் பாலா, தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையும், அவரது 'வணங்கான்' பட இசை வெளியீட்டு விழாவையும் இணைந்து கொண்டாடும்படி நேற்று சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில் 'பாலா 25' விழா நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்துகொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன், பாலா குறித்து, " 'சேது' படம் வரும்போது எனக்கு 14 வயசு. அந்த க்ளைமேக்ஸ் பாதிப்பைக் கொடுத்தது. பாலா சார் படத்தை திரையரங்கத்துல பார்த்ததுலாம், இன்னைக்கு நெனச்சு பார்க்கிறேன். 'அமரன்' படம் தீபாவளி நெகடிவ் எண்டிங் இருக்குனு சொல்லும்போது, எல்லோரும் 'பிதாமகன்' படம் தீபாவளிக்கு வந்து ஹிட்டடிச்சதுனு சொன்னாங்க.
அவரை கொண்டாடுற நிகழ்வுல நான் இருப்பது எனக்குப் பெருமை. 'அவன் இவன்' படத்தோட நிகழ்வை நான்தான் தொகுத்து வழங்குனேன். அந்த நிகழ்வை ரொம்ப பயந்து பயந்து பண்ணினேன். பாலா சார் மாதிரி படம் எடுக்கணும்னு ஊர்ல இருந்து கிளம்பி வந்தவங்க நிறைய பேர் இருக்காங்க. அப்படியான தாக்கத்தை அவர் ஏற்படுத்தியிருக்கார். அவருடைய திரைமொழி ரொம்ப தனித்துவமானது. அருண் விஜய் அண்ணன்தான் 'நீ கண்டிப்பா வரணும் தம்பி'னு கூப்பிட்டார். அருண் விஜய் சார் எனக்கு ரொம்ப சீனியர். அவர் விட்டுக் கொடுக்காமல் முயற்சி பண்றதுதான் அவரோட உண்மையான வெற்றியாகப் பார்க்கிறேன். தம்பியாக இந்தப் படத்துக்கு அவரை வாழ்த்துறேன். பொங்கலுக்கு அஜித் சார் படம் வருது, வணங்கான் படமும் வரட்டும். ரெண்டு படமும் வெற்றி அடையும்" என்று பேசியிருக்கிறார்.