திறமையை வீணடிக்காதே..! இந்திய வீரருக்கு அறிவுரை வழங்கிய பீட்டர்சன்!
Basics of Share Market 23: மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன - தெரிந்துகொள்வோமா?!
பங்குச்சந்தை என்ற வார்த்தையை கேள்விபட்ட அனைவரும், நிச்சயம் மியூச்சுவல் ஃபண்ட் என்ற வார்த்தையையும் கேள்விபட்டிருப்பீர்கள். அப்படி என்றால் என்ன என்று யோசித்திருக்கிறீர்களா? அதற்கான பதில் இதோ...
பங்குச்சந்தை என்றால் எந்தப் பங்கை வாங்க வேண்டும்? என்ன நிறுவனத்தின் பங்கை வாங்க வேண்டும்? அது லாபத்தில் போகிறதா...நஷ்டத்தில் போகிறதா என்று நாமே கண்காணிப்பது. மியூச்சுவல் ஃபண்ட் என்றால் இவை அனைத்தையும் நமக்கு பதிலாக இன்னொருவர் கவனிப்பது ஆகும்.
'என்னது இன்னொருவரா?' என்று அதிர்ச்சி ஆகாதீர்கள். இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் படிப்பை முடித்து, தேர்ச்சி பெற்றவர் தான், அந்த இன்னொருத்தர். இவர்களிடம் நாம் சென்று நம்மால் எவ்வளவு தொகையை முதலீடு செய்ய முடியும், எத்தனை ஆண்டுகளில் வருமானம் வேண்டும் என்று சொல்லிவிட்டால் போதும். அவர்களே நமக்கு ஏற்ற பங்கு எது என்று பார்த்துகொள்வார்கள். நாம் முதலீடு செய்திருக்கும் பங்கில் எதாவது மாற்றம் நடந்தால், அதற்கேற்ற மாதிரி அவர்கள் முதலீட்டை மாற்றுவார்கள்.
அதற்காக, நமக்கு வரும் லாபத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை ஃபீஸாக எடுத்துகொள்வார்கள். ஆனால், இதில் பெரிய பிளஸ் என்றால் எந்நேரமும் பங்குச்சந்தையை நாம் கவனித்துகொண்டே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்கள் பார்த்துகொள்வார்கள். நாம் அவ்வப்போது அதன் போக்கை மேற்பார்வை செய்தால் மட்டும் போதுமானது.
நாளை: ஃபண்டுகள், அதன் வகைகள் பற்றி தெரிந்துகொள்வோம்...வாங்க!