Basics of Share Market 29: கேண்டில் ஸ்டிக் பேட்டர்ன் analaysis-ல் எக்ஸ்பெர்ட் ஆகலாமா?
முந்தைய அத்தியாயங்களில் கேண்டில் ஸ்டிக் பேட்டர்ன் மற்றும் அதன் வகைகளை பற்றி தெரிந்திருக்கிறோம். கேண்டில் ஸ்டிக்கை வைத்து நேற்று, இன்று, நாளை முதலீடுகளை பற்றி தெரிந்துகொள்ளலாம். அதாவது பங்கின் போக்கு எப்படி போயிருக்கிறது என்று தெரிந்துகொண்டு, அதற்கேற்ப செயல்படலாம்.
கேண்டில் ஸ்டிக்கை பொறுத்தவரை, குறிப்பிட்ட கால அளவின் கேண்டில் ஸ்டிக் மட்டும் பாராமல் முன் எப்படி இருந்திருக்கிறது. எப்போது குறைந்திருக்கிறது, எப்போது இறங்கியிருக்கிறது, எவ்வளவு ஏறியிருக்கிறது, எவ்வளவு இறங்கியிருக்கிறது என்பதைப் பாருங்கள்.
சிவப்பு கேண்டில் ஸ்டிக் அதிகமாக இருக்கிறதா...பச்சை இருக்கிறதா? அதிலும் எந்த வகை இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். அதிகமாக சாதகமான சூழல் இல்லையெனில், அந்தப் பங்கை வாங்காதீர்கள். அப்படியே வாங்க வேண்டுமானாலும், அதில் அதிக தொகையை முதலீடு செய்யாதீர்கள்.
மேலும் கேண்டில் ஸ்டிக்கை பார்க்கும்போது, அதன் கோடுகளை முக்கியமாகப் பாருங்கள். அப்போது தான் அது எவ்வளவு தூரம் வரை சென்றிருக்கிறது...எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதை கணிக்க முடியும்.
நாளை: ஒரு நிறுவனத்தின் பங்கு மதிப்பு சரியும்போது, பங்கை விற்காதீங்க... வாங்குங்க!BAsics