``எனக்குத் தெரியாமல் காவலர்களுக்கு பணி'' -உள்துறை செயலருக்கு இன்ஸ்பெக்டர் அனுப்ப...
BB Tamil 8: 'என் வாழ்க்கையில தலையிடாதீங்க..!' - விஷால் விவகாரத்தில் ரவீந்தரிடம் காட்டமான தர்ஷிகா
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 99-வது நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்னும் நிகழ்ச்சி முடிவடைய சில தினங்களே உள்ளன. இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து, தீபக் மற்றும் அருண் ஆகிய இருவர் வெளியேறியுள்ளனர். டாப் 5 போட்டியாளராக யார் யார் இருக்க போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பும் மக்களிடையே நிலவுகிறது.
இந்நிலையில் இன்று( ஜனவரி 13) வெளியாகி இருக்கும் முதல் புரோமோவில் தர்ஷிகா பிக் பாஸ் வீட்டிற்குள் வருகிறார். அவருக்கும் ரவீந்தருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்படுகிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற ரவீந்தர், தர்ஷிகா விஷாலை வெளியில் தவறாக புரொஜக்ட் செய்து வைத்துருக்கிறார் என்று போட்டியாளர்களிடம் சொல்லி இருந்தார்.
தற்போது தர்ஷிகா இதுதொடர்பாக ரவீந்தரிடம் வாக்குவாதம் செய்கிறார். 'நான் விஷால் பெயரை டேமேஜ் செய்யவில்லை. நீங்கள் அப்படி சொன்னது எனக்கு தவறாக தோன்றியது' என்று தர்ஷிகா ரவீந்தரிடம் சொல்கிறார். அதற்கு ரவீந்தர்,' நீ அப்படி எதுவும் பண்ணவில்லை என்றால் ஏன் எல்லோரும் விஷாலை தவறாக நினைக்கிறார்கள்.
நீ வெளியில் அந்தமாதிரி புரொஜக்ட் செய்து வைத்திருக்கிறாய்' என்றார். 'நான் என்ன செய்திருக்கிறேன் என்று எனக்கும் என் கூட உள்ளவர்களுக்கும் தெரியும். நீங்கள் என் வாழ்க்கையில் தலையிடாதீர்கள்' என்று தர்ஷிகா கோபப்பட ரவீந்தர்,'நீயும் என்னிடம் இப்படி பேச வேண்டாம்' என்று சத்தம் போடுகிறார்.