423 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸி. இமாலய வெற்றி: விடைபெற்றார் டிம் சௌதி!
BB Tamil 8: `டாஸ்க்கில் மோதல்(?) ; மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட ராணவ்' - என்ன நடந்தது?
பிக் பாஸ் சீசன் 8-ன் 72- வது நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ராணவ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார் என பிக் பாஸ் சொல்கிறார்.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 70 நாட்களை கடந்திருக்கிறது. இன்னும் சில வாரங்களில் பைனல் வாரமே வந்துவிடும். இதனால் கடுமையான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில், டாஸ்கில் ஜெப்ரி மற்றும் ராணவ் இடையே போட்டி நடக்கிறது. அப்போது ராணவ் கீழே விழ, அவர் தோள்பட்டையில் அடிபட்டிருக்கிறது. அவர் தனக்கு வலிக்கிறது என கத்துகிறார்.
ஆனால், ஜெப்ரி, சௌந்தர்யா ஆகியோர் அவன் நடிக்கிறான் என கூறுகிறார்கள். உடனடியாக ராணவ்வை அருண் மற்றும் விஷால் இருவரும் அழைத்துக்கொண்டு, கன்பக்ஷன் ரூமுக்கு செல்கிறார்கள். அப்போது கூட, வெளியே இருக்கும் சிலர், ராணவ் நடிக்கிறான் என பேசிக்கொண்டிருக்க, பிக் பாஸ் அறிவிப்பு ஒன்று வருகிறது. `ராணவ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்’ என்று பிக்பாஸ் அறிவிக்க அனைவரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். என்ன நடக்கப்போகிறது என்பதை இன்றைய எபிசோடில் பார்த்து தான் தெரிந்து கொள்ள முடியும்!