செய்திகள் :

BBTAMIL 8: DAY 57: ஓப்பன் நாமினேஷன்; எவிக்ஷன் பயத்தில் தவிக்கும் சாச்சனா; மஞ்சரிக்கு வந்த சோதனை!

post image

இந்த வாரத்தின் கேப்டனாக ஜெப்ரி தேர்வானார். சவுந்தர்யா, அன்ஷிதா உள்ளிட்ட பலரும் இதனால் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால் சாச்சனாவிற்கு கிடைக்காததற்காக ஜாக்குலின் வருத்தப்பட்டார். அதுவொரு பாவனையா? ஜெப்ரி ஆடியதும் டபுள் கேம் என்பது மாதிரிதான் தெரிகிறது. என்னவென்று விரிவாகப் பார்ப்போம்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 57

எட்டாவது சீசனின் protagonist யார் தெரியுமா? மஞ்சரிதான். இதை யார் சொன்னது? அதுவும் மஞ்சரியேதான். ‘அப்படியாக தன்னைச் சித்தரிக்கிறார்கள்’ என்று முத்துவிடம் அவர் புலம்பியிருக்கிறார். இதை முத்து தீபக்கிடம் சொன்ன போது “protagonist-ன்னா வில்லி. மஞ்சரியோட ஆட்டிடியூட் அப்படியிருக்கு. எல்லாத்துக்கும் நொய்.. நொய்..ன்னா.. என்ன பண்றது” என்று சலித்துக் கொண்டார் தீபக். பிரச்சினை பீரங்கியாக இருந்தாலும், வந்திருக்கும் வைல்ட் கார்ட் என்ட்ரிகளில் மஞ்சரி மட்டுமே ஸ்மார்ட்டாக ஆடி வருகிறார் என்பதையும் கவனிக்க வேண்டும். 

BBTAMIL 8: DAY 57

‘திருட்டு பிரியாணி’ கும்பல் நள்ளிரவில் எதையோ சாப்பிட்டுக் கொண்டிருந்தது. “என்னப்பா பண்றீங்க..?” என்று தீபக் வந்து சந்தேகமாக விசாரிக்க “ண்ணே.. ரெகுலர் சாப்பாடுதாண்ணே.. ஸ்டோர்ஸ்ல இருந்து எதையும் எடுக்கல. நைட்ல சாப்பிட்டு பழக்கமாயிடுச்சு” என்றார் விஷால். “அண்ணே.. நான் இங்க இருக்கேன். நீங்க பயப்படாம போங்க” என்று அன்ஷிதா தைரியம் சொல்ல “பிரியாணி கும்பல்ல நீயும்தான் ஒருத்தி’ என்று கட்டையைப் போட்டார் ஆனந்தி. பிறகு சவுந்தர்யா வந்து புதிய கூட்டாளியாக இணைந்து கொள்ள, தயிரில் சர்க்கரையைப் போட்டு தின்றார்கள். “கிச்சன் இன்சார்ஜா இருந்தா பல சௌகரியங்கள் போல” என்றார் தர்ஷிகா. ஆக விசே எச்சரித்தும் விதிமீறல்கள் நிற்காது போல. 

கேப்டன் ஆன ஜெப்ரி - தியாகியா, சாமர்த்தியசாலியா?

நாள் 57. வெளியே அவனவன் கனமழையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க ‘மேகம் கருக்குது.. தக்கத்..தக்க..தக்க..ஜிம்..’ பாடலை கும்மாளமாக அலற விட்டார் பிக் பாஸ். தன்னை ஜோதிகாவாக பாவித்துக் கொண்ட பவித்ரா மழையில் நனைந்து சந்திரமுகியாக ஆடினார். 

கேப்டன்ஸி டாஸ்க். உடல் வலிமை சார்ந்தது என்றால் ஜெப்ரி எளிதில் ஜெயித்து விடுவார் என்பதால் புத்தி சார்ந்த டாஸ்க்கை பிக் பாஸ் வைத்தாரோ, என்னமோ?! கீழே பரப்பி வைக்கப்பட்டிருக்கும் நம்பர் பிளேட்டுகளில் இருந்து டிவியில் காண்பிக்கப்படும் பிளேட்டை தேர்வு செய்து எடுக்க வேண்டும். “விட்டுக் கொடுத்தியோ. . அவ்ளதான்…” என்று சவுண்டு எச்சரிக்க “உனக்காக ஆடறேன்” என்று கிளம்பிச் சென்றார் ஜெப்ரி.

BBTAMIL 8: DAY 57

ஆட்டம் ஆரம்பித்தது. ஜெப்ரியைப் பார்த்தால் கூலாக ஆட்டத்தில் கவனமாக பதட்டமின்றி இருந்தார். ஆனால் சாச்சனாவிடம் சிறிய பதட்டம் இருந்தது. ஆரம்பத்தில் ஜெப்ரியின் கை ஓங்க சவுந்தர்யா துள்ளிக் குதித்தார். அன்ஷிதா சேச்சியும் ஹாப்பி. ஆனால் பிறகு சாச்சனாவும் ஈடு கொடுக்க இருவருமே சமமான புள்ளிகளை எடுக்க ஆட்டம் டை ஆனது. ஆக, இறுதிக் கேள்வியில்தான் வெற்றி. டிவியில் படமாக காண்பிக்காமல் பிளேட்டின் நம்பரை வார்த்தைகளாகச் சொன்னார் பிக் பாஸ். இருவரும் ஒரே நேரத்தில் அந்த பிளேட்டை கவனித்து விட வெடுக்கென்று உடனே எடுத்ததால் ஜெப்ரி வெற்றி. சவுந்தர்யாவின் உற்சாகம் கரை புரண்டு ஓடியது. கூடவே ஜாக்குலினும் துள்ளிக் குதித்தது ஒருவகையான நாடகம் என்று தோன்றியது. ஏன்? 

பின்னர் ஜெப்ரியை தனியாக அழைத்த ஜாக்குலின் “சாச்சுவிற்கு விட்டுத் தரேன்னு சொன்னியே.. என்ன ஆச்சு?’ என்று விசாரிக்க “நான் ரெண்டு மூணு தடவை விட்டுக் கொடுத்தேன். கடைசி டைம்ல டக்குன்னு எடுக்க வேண்டியதாப் போச்சு.. சுத்தி காமிரா இருக்குல்ல.. சவுந்தர்யா வேற மண்டையைக் கழுவிடுச்சு” என்று ஜெப்ரி சொல்ல “அப்படியா. அவளுக்காகத்தான் வின் பண்ணியா?” என்று கை கொடுத்து விலகினார் ஜாக்குலின். 

முதலில் இவ்வாறு ஒருவரை விட்டுத்தரச் சொல்லி வற்புறுத்துவதும், ‘ஏன் பண்ணலை?” என்று பிறகு விசாரிப்பதும் வேண்டாத வேலை. ஜெப்ரியும் தந்திரக்காரராக மாறி வருகிறார். சவுந்தர்யாவிடம் ரைட் இண்டிகேட்டர் போட்டு ஜாக்கிடம் லெஃப்ட் இண்டிகேட்டர் போட்டு, நேராக வண்டியை ஓட்டி கேப்டன் ஆகி விட்டார். “கேப்டன் பதவியை தூக்கித் தர தயாரா இருந்த நல்ல பையன்” என்கிற மைலேஜூம் கிடைக்கும். 

எவிக்ஷன் பயத்தில் தவிக்கும் சாச்சனா

கிச்சன் இன்சார்ஜாக தர்ஷிகா, ஸ்டோர் இன்சார்ஜாக சத்யா என்று டீமைப் பிரித்த ஜெப்ரி கிச்சன் டீமில் அன்ஷிதா, விஷால், முத்து, ரயான், பவித்ரா ஆகியோரை நியமித்தார்.  மேற்பார்வையாளராக முத்துவிற்கு கூடுதல் பொறுப்பு. மக்கள் கருத்துக் கணிப்பின் படி கேப்டனுக்கு ஒரு உதவியாளரை அனைவரும் கூடி தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற குறிப்பு வந்தது. அந்தச் சமயத்தில் பவித்ராவின் பெயரைச் சொல்லி ஆச்சரியப்படுத்தினார் ஜாக்குலின். என்றாலும் பெரும்பான்மையாக வாக்குகள் சாச்சனாவிற்கு கிடைத்ததால் அவர்தான் கேப்டனின் அஸிஸ்டெண்ட். 

BBTAMIL 8: DAY 57

இருவருமே வயதில் இளையவர்களாக இருந்தாலும், அவர்களின் தலைமையை உற்சாகத்தோடு ஏற்றுக் கொண்ட ஹவுஸ்மேட்ஸ்களைப் பாராட்ட வேண்டும். தாங்களே வெற்றியடைந்தது போல் பெரும்பாலோனோர் மகிழ்ந்தார்கள்.  கேப்டனுக்கு சமமான மதிப்பை சாச்சனாவிற்குத்  தருவதில் ஜெப்ரி கவனமாக இருந்ததும் பாராட்டுக்குரியது. 

சாச்சனாவிற்குள் தோல்வி பயம் அதிகமாகியிருக்கிறது. ‘யார் வெளியே போவா?” என்று கடந்த வாரத்தில் கேட்கப்பட்ட போது தன்னையே அவர் சொல்லிக் கொண்டார். பார்வையாளர்களின் கைத்தட்டலும் எச்சரிக்கை மணியாக அவருக்குள் ஒலித்திருக்கலாம். கேப்டன் பதவியாவது தன்னைக் காப்பாற்றும் என்று எதிர்பார்த்தார். அதுவும் நடக்கவில்லை. 

“ஒரு மாதிரி கில்ட்டா இருக்கு. அந்தப் பிளேட்டை நான் எடுத்திருக்கணும். ஜெப்ரி கிட்ட நாமினேஷன் ஃப்ரீ பாஸூம் இருக்கு. அது என்னவாகும்?” என்று கவலையுடன் கேட்டுக் கொண்டிருந்தார். ஜெப்ரி தன்னைக் காப்பாற்றுவான் என்கிற நம்பிக்கை அவருக்குள் இருந்ததா? ஆனால் ஜெப்ரியின் வழியாகவே சாச்சனாவிற்கு பிறகு ஆப்பு காத்திருந்தது. சாச்சனாவை முதலில் நாமினேட் செய்தவர் ஜெப்ரிதான். (இவங்களைப் புரிஞ்சுக்கவே முடியலைப்பா!). 

மஞ்சரி மீது அதிகமாக விழுந்த நாமினேஷன் வாக்குகள்

“கேப்டன் கிட்ட பிரச்சினைகள் அதிகமா போகாம.. நீயே எல்லாத்தையும் டீல் பண்ணு” என்று உதவி கேப்டனான சாச்சனாவிற்கு அட்வைஸ் தந்து கொண்டிருந்தார் தர்ஷிகா. 

ஓப்பன் நாமினேஷன். எதிருக்கு எதிராக நின்று நாமினேட் செய்ய வேண்டும். சுனிதாவின் மொழியில் சொன்னால் ‘மூஞ்சு மேல பேச வேண்டும்’.  “இந்த அறிவுரை, பரிந்துரை, மன்னிப்பு போன்ற டெட்டால் போட்ட வார்த்தைகள்லாம் கூடாது. முகத்தைப் பார்த்து தைரியமா காரணங்களைச் சொல்லி நாமினேட் செய்யணும்” என்று வார்ம்-அப் செய்தார் பிக் பாஸ். 

BBTAMIL 8: DAY 57

இந்த வாரம் பெரும்பாலான வாக்குகள் மஞ்சரியின் மீது விழுந்தன. ‘பிரச்சினை பீரங்கியாக’ இருக்கிறாராம். அடப்பாவிகளா!.. ஒரு ரொட்டிக்கு உலகப் போரா என்று அவரின் மைண்ட் வாய்ஸ் ஓடியிருக்கும். ‘டீமாக இருந்த போது தனியாக விளையாடினார். தனியாக விளையாட நேரும் போது அணியைத் தேடுகிறார்’ என்று வித்தியாசமான புகாருடன் முத்து மீது சில வாக்குகள் விழுந்தன. யார் நாமினேட் செய்தாலும் ரியாக்ஷன் காட்டாமல் சிரித்த முகத்துடன் முத்து ஏற்றுக் கொள்வது ஒரு நல்ல உத்தி. இது எதிராளியின் தன்னம்பிக்கையை சிதைக்கும் தந்திரம். 

இந்த வாரமும் ஜாக்குலின் தொடர்ந்து நாமினேட் ஆனார். அவரை ஆனந்தியும் தர்ஷிகாவும் நாமினேட் செய்தார்கள்.  “அது ஏன் நம்ம மேல இவ்ள கடுப்பா இருக்காங்க.. நம்மள ஜெயிக்கவே விடமாட்றாங்க” என்று கோவா கேங்க்ஸ் தலைவியான ஜாக்குலின் ஆதங்கப்பட்டார். 

தன்னை நாமினேட் செய்த முத்து மற்றும் சவுந்தர்யாவிடம் விளக்கத்தைக் கேட்டறிய முற்பட்டார் பவித்ரா.  முதலில் பொறுமையாக விளக்கம் சொன்ன சவுண்டு, சில நொடிகளிலேயே பொறுமையிழந்து ‘என்ன.. இப்ப..” என்று எரிந்து விழுந்து விட்டு “அவங்களா புரிஞ்சுக்கணும்” என்று முனகியபடி சொல்ல, இதைக் கேட்காதது போல் கடந்து சென்றார் பவித்ரா. ஆனால் கேட்டு விட்டார் என்பது பிறகுதான் தெரிந்தது. “யார் என்ன காரணம் வேணுமின்னாலும் சொல்லட்டும். அதுல உண்மை இருக்கான்னு உனக்குத்தான் தெரியும். இருந்தா மட்டும் அதைப் பத்தி யோசி” என்று பவித்ராவிற்கு சரியான அட்வைஸ் தந்தார் தர்ஷிகா. 

மூன்று மெயின் அணிகளாகப் பிரிந்திருக்கும் பிக் பாஸ் வீடு

கோவா கேங்ஸ் புலம்புவதைப் போலவே ஆனந்தியும் தனது டீமிடம் ‘நம்மள வாழ விடமாட்றாங்க’ என்பது மாதிரி புலம்பிக் கொண்டிருந்தார். ‘கிச்சன் சண்டைல விஷால் என்ன பண்ணாரு.. அப்புறம் எப்படி என்னைக் காரணமா சொல்ல முடியும்? அருண், சத்யாவையெல்லாம் விஷால் நாமினேட்டே செய்ய மாட்டாரு’ என்பது மாதிரியாக அவரது அனத்தல் தொடர்ந்தது. “ரெண்டு டீமா இருந்த போது உன்னோட குரலும் முத்து குரலும் மட்டும் கேட்டுது. இப்ப எல்லோருமே பேச ஆரம்பிச்சிட்டாங்க” என்று ஆனந்தியிடம் அன்ஷிதா சொன்னது சரியான அப்சர்வேஷன். 

BBTAMIL 8: DAY 57

தன் மீதே அதிகமான வாக்குகள் விழுந்தது குறித்து மஞ்சரி அதிருப்தியடைந்தது நியாயமான விஷயம். இது ஓப்பன் நாமினேஷன் என்னும் போது ஒருவர் மீதே அதிக வாக்குகளைக் குத்தி வீணாக்காமல் இருந்திருக்கலாம். பிரச்சினை பீரங்கியாக இருந்தாலும் மஞ்சரியால் ஏதாவது விஷயம் நடக்கிறது. ஆனால் எதையுமே செய்யாமல் பல வாரங்கள் நீடிக்கிறவர்களை விடவும் மஞ்சரி அந்த வீட்டிற்குள் இருப்பது முக்கியமானது. 

ஷாப்பிங் புள்ளிகளை சம்பாதிப்பதற்கான டாஸ்க் சுவாரசியமாக இருந்தது. ஒருவரின் காதில் மட்டும் சினிமாப் பாடல் ஒலிக்கும். அதை உடல்மொழியின் வழியாக மற்றவர்களுக்கு அவர் உணர்த்த, அது எந்தப் பாடல் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். ஒவ்வொரு கண்டுபிடிப்பிற்கும் 500 புள்ளிகள் பரிசு. 

வழக்கம் போல் நிகழ்ந்த ஷாப்பிங் சண்டைகள்


ஆரம்பத்தில் வந்த பாடல்கள் எளிதாக கண்டுபிடிக்கப்பட்டன. பாடல் ஒலிப்பதற்கு முன்பே எம்.ஜி.ஆர் மாதிரி செய்து ‘இருங்கப்பா.. இன்னமும் பாட்டே போடலை” என்று விஷால் செய்த காமெடி சுவாரசியம். பிறகு ‘கண்கள் இரண்டால்’ பாடலை தலையைக் கோதி தலையை அசைத்து எளிதாக கண்டுபிடிக்க வைத்து விட்டார். தீபக்கிற்கு வந்த பாடலை எவ்வாறு உணர்த்துவது என்று தெரியாமல் தவித்து தோற்றார். இதே கதைதான் அருண் மற்றும் ரஞ்சித்திற்கும். 

பாடல்களின் தேர்வில் பிக் பாஸ் டீமின் குறும்பும் இருந்தது. தர்ஷிகாவிற்கு ‘லவ் பேர்ட்ஸ்.. லவ் பேர்ட்ஸ்’ என்கிற பாடல் வந்தது. ஜெப்ரிக்கு ‘நான் ஆணையிட்டால்’ என்கிற பாடல். இந்த வார கேப்டன் என்பதால். 

ஷாப்பிங் டைம். 6500 புள்ளிகள் சம்பாதித்திருந்தார்கள். விஷாலும் தர்ஷிகாவும் பொருட்களைத் தேர்வு செய்ய கணக்குப் போடும் வேலையை முத்து எடுத்துக் கொண்டார். இது முடிந்த போது ‘ஆட்டா மாவு ஏன் பத்து கிலோ எடுத்தீங்க?” என்று ஜாக் குறை சொல்ல “ஒருத்தர் போனப்புறம் அன்ஷிதா போயிருக்கலாம்ன்னு சொல்லக்கூடாது” என்று தர்ஷிகா கோபப்பட ஒரு புகைச்சல் ஆரம்பமானது. 

BBTAMIL 8: DAY 57

“இப்படி எடுத்திருக்கலாம்.. அப்படி எடுத்திருக்கலாம்” என்று ஆளாளுக்கு மூலைக்கு மூலை பேசிக் கொண்டிருந்தார்கள். “தயிரே எடுக்கலையா?” என்று மஞ்சரி கேட்டுக் கொண்டிருந்தார். அதுதான் நேற்றிரவே ‘பிரியாணி கும்பலால்’ காலி செய்யப்பட்டு விட்டதே?!

ஆறிப் போன ரொட்டி, குழம்பு பிரச்னையைப் பேசித் தீர்ப்பதற்காக மஞ்சரியும் அருணும் அமர்ந்தார்கள். “யாராவது உங்களை தப்பு சொன்னா வேற மோடிற்கு போயிடறீங்க.. ஒரே விஷயத்தை ரெண்டு இடத்துல ரெண்டு டோன்ல சொல்றீங்க. சொல்ற ஆளா நான் மட்டும்தான் இருக்கணும்ன்னு நெனக்கறீங்க” என்று மஞ்சரி சொல்ல, “என் கிட்ட என்ன வேணா சொல்லலாம். ஆனா நீங்க சொல்ற விதம்தான்..” என்று சொன்ன அருண் “முத்து உள்ளே வராம இருந்தா இந்தப் பிரச்சினை அப்பவே முடிஞ்சிருக்கும்” என்கிற மாதிரி பேசி ஒரு மாதிரியான சமாதானத்திற்கு வந்தார்கள். 

ஜெப்ரியின் தலைமையில் இந்த வாரம் வீடு எப்படி இயங்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.!

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MadrasNallaMadras

FAMILY படம்: ``சீரியல்ல துணை நடிகையா இருக்கிற எனக்கு இந்த அங்கீகாரம் ரொம்பவே பெரிசு" - சுபிக்‌ஷா

’அழுத்தமான வேடத்தில் குறைவில்லாத நடிப்பை வழங்கியிருக்கிறார்’னு என்னைப் பத்தி இந்த வார ஆனந்த விகடன்ல எழுதியிருக்காங்க. சீரியல்கள்ல கூட மெயின் ரோல்ல இல்லாம சப்போர்ட் கேரக்டர்கள்ல நடிச்சிட்டிருக்கிற எனக்... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 66: `நான் போகமாட்டேன்' அடம்பிடித்த அன்ஷிதா; வினையாகிப் போன முத்துவின் விளையாட்டு

இந்த சீசனில் எத்தனையோ சுமாரான எபிசோடுகளை எப்படியோ ஒப்பேற்றி எழுதியுள்ளேன். ஆனால் இந்த எபிசோடு இருக்கிறதே.. பயங்கர இழுவை. ஒரு துளி சுவாரசியம் கூட இல்லை. “பிக் பாஸ்.. நான் சுச்சா போறேன்.. எனக்காக ராணவ் ... மேலும் பார்க்க

Serial Update: `நாதஸ்வரம்' கீதாஞ்சலிக்கு பையன்; சுரேந்தர்-நிவேதிதா ஜோடிக்குப் பெண் குழந்தை

திருமுருகன் இயக்கத்தில் ஒளிபரப்பான 'நாதஸ்வரம்' சீரியலில் அவரது முறைப்பெண்ணாக நடித்து சின்னத்திரைக்கு அறிமுகமானவர் கீதாஞ்சலி. இவருக்கும் திருமுருகனின் சொந்த ஊரான காரைக்குடிதான்.அந்த சீரியலுக்குப்பிறகு ... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 65: `கால்ல கூட விழறேன்' - கலங்கிய தீபக்; அருண் - முத்து - காரசாரமான மோதல்

ஸ்கில், லேபர் என்று எந்த நேரத்தில் தீபக் சொன்னாரோ, அது கொழுத்த ராகுகாலமாக இருந்திருக்க வேண்டும். அதன் காரணமாக அருண் - தீபக் இடையே சண்டை கொழுந்து விட்டு எரிந்தது மட்டுமல்லாமல், அதிலிருந்தே வீக்லி டாஸ்க... மேலும் பார்க்க

Bigg Boss 8: `எனக்கு கிடைச்ச மாதிரியான குழந்தைப் பருவம் யாருக்கும் இருக்கக்கூடாது’ - சிவக்குமார்

பிக் பாஸ் சீசன் 8, 60 நாட்களைக் கடந்து பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.ஈவில் , ஏஞ்சல் என டாஸ்க்குகளும் ஒரு புறம் சூடுபிடித்துக் கொண்டிருக்க எவிக்‌ஷனிலும் பரபரப்பு தொடங்கிவிட்டது. கடந்த வாரம் டிவிஸ்... மேலும் பார்க்க

Siragadikka aasai : ரோகிணிக்கு காத்திருக்கும் மூன்று முக்கியப் பிரச்னைகள்! - சிறகடிக்க ஆசை அப்டேட்

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி மட்டும் தப்பித்து விடுவது போல கதை நகர்வது ஏன் என்னும் கேள்வி ரசிகர்கள் மத்தியில் ஒவ்வொரு முறையும் எழுகிறது. ரோகிணி மிகவும் சுலபமாக சிக்கி விடுவது போல இருந்தால் கதையில் ச... மேலும் பார்க்க