செய்திகள் :

Bengaluru: இறந்து போனதாக எண்ணிப் புதைக்கப்பட்ட பெண்; யோக பயிற்சியால் உயிர் தப்பினாரா?

post image

பெங்களூரைச் சேர்ந்த 34 வயது பெண் ஒருவர் யோகா மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவரது யோகா வகுப்பிற்கு வரும் சதீஷ் ரெட்டி என்ற டிடெக்டிவ் ஏஜென்சி உரிமையாளர், வகுப்பிற்கு வந்த சில நாட்களிலேயே யோகா மாஸ்டரான அந்தப் பெண்ணிடம் துப்பாக்கி சுடுவதற்கு (riffle shooting) சொல்லித் தருவதாகக் கூறியுள்ளார்.

இதற்கு அந்தப் பெண் சம்மதம் தெரிவித்த நிலையில் காரில் அழைக்க வந்துள்ளார் சதீஷ் ரெட்டி. காரில் மேலும் 3 நபர்கள் இருப்பதைக் கண்டு சந்தேகித்த அவர் இது குறித்து பயணத்தின் போதே பேசத் தொடங்கியுள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த சதீஷ் ரெட்டி துப்பாக்கி முனையில் அவரை மிரட்டியுள்ளார். அந்தக் காரிலிருந்த சதீஷ் ரெட்டியின் மனைவி பிந்து தனது கணவருடன் தவறான தொடர்பில் இருப்பதாகச் சந்தேகப்பட்டு அவரைத் தாக்கியுள்ளார். 

Yoga / Representational

தாக்குதலில் நினைவிழந்த அந்த பெண்ணை, அருகிலிருந்த காட்டிற்குள் எடுத்துச் சென்று அவரைப் புதைத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். ஆனால் அந்த பெண், தான் மரணமடைய வில்லை. யோகா திறமையைப் பயன்படுத்தி மரணித்தது போல நடித்ததாகக் கூறுகிறார்.

அவர்கள் சென்றதை அறிந்த அந்தப் பெண் அங்கிருந்து தப்பித்து 3 கி.மீ நடந்த சென்று வெங்கடேஷ் என்பவரின் வீட்டை அடைந்துள்ளார். அங்கு அவருக்கு முதலுதவி செய்யப்பட்டதுடன், போலீஸாருக்கு விஷயம் தெரிவிக்கப்பட்டுள்ளது‌. சதீஷ் ரெட்டி, அவரது மனைவி பிந்து, மேலும் 3 நபர்கள் அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தின் பேரில் நவம்பர் 6 சிக்காபல்லாப்பூர் போலீஸால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

மாணவர்களை மிரட்டி தன்பாலின உறவு; விடுதிக் காப்பாளர் உள்ளிட்ட மூவர் கைது- தாராபுரத்தில் நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியின் விடுதியிஸ் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கிப் பயின்று வருகின்றனர். இந்நிலையில், விடுதியில் தங்கிப் படி... மேலும் பார்க்க

சேலம்: கஞ்சா வழக்கு கைதியை பாலியல் வதை செய்த சக கைதிகள்; அலட்சியமாக இருந்த சிறைக்காவலர்கள் சஸ்பெண்ட்

சேலம் ஆத்தூரில் மாவட்ட கிளைச் சிறை செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட கைதிகள் தண்டனைப் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனைப் பெற்றுவரும் கை... மேலும் பார்க்க

கிண்டி: அரசு மருத்துவரை கத்தியால் குத்தியது ஏன்? - கைதான இன்ஜினீயர்; விசாரணையில் வெளிவந்த தகவல்

சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருபவர் பாலாஜி ஜெகநாதன் (55). இவர் இன்று காலை (13.11.2024) பணியிலிருந்த போது அங்கு வந்த இளைஞர் ஒருவர், மருத்துவரை கத்தியால் குத்திவிட்டு ... மேலும் பார்க்க

சென்னை: நகைக்கடை ஓனருக்கு ஷாக் கொடுத்த இளம்பெண் - தங்கம், வைர நகைகளைத் திருடியது எப்படி?

சென்னை தி.நகர் டாக்டர் நாயர் சாலையில் நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையை சுரேஷ் என்பவர் நடத்தி வருகிறார். தீபாவளி பண்டிகையையொட்டி இந்த நகைக்கடையில் வாடிக்கையாளர்களின் கூட்டத்தை சமாளிக்க ... மேலும் பார்க்க

கிண்டி: ``அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு கூட பாதுகாப்பு இல்லை"- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை கத்தியால் குத்தி இருக்கின்றனர்.பணியில் இருந்த மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. புற்றுநோய் துறை மருத்... மேலும் பார்க்க

கிண்டி: `அம்மாவுக்கு சரியா சிகிச்சை அளிக்கல’ மருத்துவருக்கு கத்திகுத்து; போராட்டத்தில் மருத்துவர்கள்

சென்னை கிண்டியில் அரசு பன்நோக்கு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு சரியாக சிகிச்சை அளி... மேலும் பார்க்க