Nobel Peace Prize: "நோபல் பரிசை ட்ரம்ப்புக்கு அர்ப்பணிக்கிறேன்" - மரியா கொரினா ம...
Bigg Boss Tamil 9: எவிக்ஷனுக்கு முன்பே அதிரடி; முதல் ஆளாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர் யார்?
விஜய் டிவியில் கடந்த வாரம் தொடங்கியது பிக்பாஸ் தமிழ் சீசன் 9. வாட்டர்மெலன் திவாகர், இயக்குநர் பிரவீன் காந்தி, வி.ஜே. பாரு உள்ளிட்ட இருபது பேர் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றனர்.
இந்த வாரம் அதாவது நாளை முதல் வார எவிக்ஷனுக்கான ஷூட்டிங் நடைபெற இருக்கிறது. சில சீசன்களில் முதல் வாரம் என்பதால் போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி என எவிக்ஷன் இல்லை என அறிவித்ததெல்லாம் நடந்திருக்கிறது.
அந்த வகையில் முதல் வாரம் எவிக்ஷன் இருக்குமா என்பது நாளை மாலை தெரிய வரும்.
அதற்குள் சமூக ஊடகங்களில் பலரது பெயர்களைக் குறிப்பிட்டு இவர்தான் வெளியேற்றுவார்கள் எனப் பரப்பி வருகின்றனர்.
இந்தச் சூழலில் பெரியதொரு அதிரடி முதல் வார எவிக்ஷனுக்கு முன்பே நடந்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து போட்டியாளர் நந்தினி இன்று வெளியேற்றப்பட்டிருக்கிறார். தவிர்க்க முடியாத காரணங்கள் எனக் குறிப்பிடுகின்றன அந்த வட்டாரங்கள்.
நந்தினியைப் பொறுத்தவரை பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தது முதலே ஒருவிதமான அப்செட் மூடிலேயே இருந்ததாகத் தெரிகிறது.

சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த நந்தினி பிக்பாஸ் வீட்டுக்குள் அழுது அரற்றியதும், அவரை சக போட்டியாளர் கனி தேற்றியதையும் அனைவரும் பார்த்திருப்பீர்கள்.
நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் ஆகியும் சக போட்டியாளர்களுடன் மிங்கிள் ஆகி நிகழ்ச்சியில் ஆர்வமுடன் கலந்து கொள்ள அவர் தயாராகவில்லை என்கிறார்கள். எனவே பிக்பாஸ் வீட்டிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.
இன்று இரவு அல்லது நாளை பிக்பாஸ் முறைப்படி இந்தத் தகவலைத் தெரிவிப்பார் எனத் தெரிகிறது.