IPL Mega Auction: அண்டர்டாக்ஸை சாம்பியனாக்கிய ஷேன் வார்னே - RR அணிக்குள் எப்படி ...
BLACKPINK: `BTS மட்டுமல்ல... இவர்களும் கொரியாவின் அடையாளம்தான்' - பிளாக்பிங்க் பெண்கள் குழுவின் கதை
இன்று உலகம் முழுவதும் கே கலாசாரம் என்கிற கொரியன் கலாசார மோகம் மக்களுக்கு உள்ளது. இதற்கு முக்கிய காரணம் கே டிராமா மற்றும் கே பாப் இசைக்குழுக்கள்தான். உலகம் முழுவதும் பிடிஎஸ் இசைக்குழு எவ்வளவு பிரபலமோ அதே அளவு பிரபலமான இசைக்குழு தான் இந்த பிளாக்பிங்க்.
பிளாக்பிங்க் என்பது ஒய். ஜி என்டர்டெயின்மென்ட் உருவாக்கிய ஒரு தென் கொரிய பெண்கள் குழு. இதில் உறுப்பினர்கள் ஜிசூ கிம், ஜென்னி கிம், லாலிசா மனொபன் மற்றும் ரோசன்னே பார்க் ஆகியோர் உள்ளனர். இந்த குழு ஆகஸ்ட் 8, 2016 அன்று அறிமுகமானது. இவர்களின் ரசிகர்கள் பிளிங்க்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
2016 ஆம் ஆண்டில் பூம்பயா மற்றும் விசில் பாடல்களுடன் அறிமுகமானது இந்த குழுவின் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தன. பூம்பயா யூடியூபில் 1 பில்லியன் பார்வையாளர்களை எட்டிய முதல் மற்றும் ஒரே கே-பாப் அறிமுக பாடல். அவர்கள் அறிமுகமான நேரத்தில் பெரும்பாலான பெண் குழுக்கள் க்யூட்டான மற்றும் அழகான பாடல்களை உருவாக்கின. ஆகவே, பிளாக்பிங்க் முற்றிலும் புதிய மற்றும் சக்திவாய்ந்த கருத்துடன் பாடல்களை அறிமுகப்படுத்தினர், இது கொரியாவில் மட்டுமல்லாமல், எல்லைகள் பல கடந்தும் எதிரொலித்தது.
வலுவான கதைசொல்லல், நல்ல சந்தைப்படுத்துதல் மற்றும் சக்திவாய்ந்த இசையுடன் வந்த பிளாக்பிங்க், விரைவில் நகரத்தின் பேச்சாக மாறியது. இவர்களின் ரசிகர் பட்டாளம் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
பிளாக்பிங்கிடம் 1 பில்லியன்+ பார்வைகளுடன் 5 பாடல்கள் உள்ளன.
இத்தனை சாதனைகளை படைத்த பிளாக்பிங்க் சாதாரணமாக இந்த இடத்திற்கு வரவில்லை. அவர்களின் ஆரம்ப நாட்களிலிருந்து, பிளாக்பிங்க் பெற்ற வெறுப்பு மிகவும் அதிகம். ஆம், அதிக புகழ் அதிக வெறுப்பு இரண்டும் அவர்களுக்கு காலத்தால் பழகி போனது.
பிளாக்பிங்க் உறுப்பினர்கள் எப்போதும் சர்ச்சைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை அல்லது அவர்களின் நம்பகத்தன்மை மற்றும் திறமை பற்றிய விமர்சனங்கள் ஏராளம்.
பிளாக்பிங்க் அறிமுகமானபோது, அவர்களின் லேபிள் ஒய்.ஜி என்டர்டெயின்மென்,ட் இந்த குழுவிடம் அழகை விட திறமை அதிகமாக உள்ளது என்பதை தெரிவிக்க விரும்பியது.
பிங்க் பொதுவாக அழகாக சித்திரிக்கப் பயன்படுகிறது, பிளாக் பொதுவாக அழகானது இல்லை என்று சித்திரிக்கப்படுகிறது. பிளாக்பிங்க் உண்மையில் 'அழகு மட்டுமே முக்கியமானது இல்லை' என்று சொல்வதைக் குறிக்கிறது. இவர்கள் அழகை மட்டுமல்ல, சிறந்த திறமையையும் உள்ளடக்கிய ஒரு குழு என்பதையும் இது குறிக்கிறது.
பிளாக்பிங்க் நவம்பர் 2023 இல் மூன்றாம் சார்லஸ் மன்னரிடமிருந்து (MBEs) ஆர்டர் ஆஃப் தி பிரிட்டிஷ் எம்பயர் (MBEs) உறுப்பினர்களைப் பெற்றது. இந்த அந்தஸ்தைப் பெற்ற முதல் மற்றும் ஒரே கேபாப் இசைக்குழு இவர்கள் தான். பிளாக்பிங்க் இந்த மரியாதையைப் பெற்ற முதல் பிரிட்டிஷ் அல்லாத கே-பாப் குழு.
ஒய்.ஜி உடனான பிளாக்பிங்க் இன் தனிப்பட்ட ஒப்பந்தங்கள் 2023 இல் முடிவடைந்தது. 2025 இல் உலகச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போவதாகவும், பிளாக்பிங்க் ஒரு ஆல்பத்தை வெளியிடுவதாகவும் ஒய்.ஜி என்டர்டெயின்மென்ட் அறிவித்தது.
பிளாக்பிங்க் தற்போது தனி நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகிறது, ஜென்னி, லிசா மற்றும் ஜிசூ ஆகியோர் ODD Atelier, LLOUD மற்றும் BLISSOO என தங்கள் சொந்த நிறுவனங்களை நிறுவியுள்ளனர்.