செய்திகள் :

ROSÉ ராக்டு WORLD ஷாக்டு... உலகளவில் ட்ரெண்டிங் நம்பர் ஒன்; சாதனைகள் படைக்கும் 'ஆப்ட்' APT பாடல்!

post image

இசை கலைஞர்களின் பாடல்கள் வெளியாவதும் அதில் சிலவற்றை மக்கள் கொண்டாடுவதும் வழக்கம் தான். அப்படி அண்மையில் வெளியாகி உலகம் முழுவதையும் வைப் செய்ய வைத்துக் கொண்டிருக்கும் பாடல் தான் 'ஆப்ட்' (APT). அக்டோபர் 18, 2024 பிரேசில் பாடகர் புருனோ மார்ஸுடன் இணைந்து தனது சமீபத்திய பாடலான ‘ஆப்ட்’-ஐ வெளியிட்டார் பிளாக்பிங்கின் ரோஸே. இதன் மூலம் கே-பாப் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை அமைத்துள்ளார் ரோஸே.

வெளியான ஒரே வாரத்தில் 134 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. யூடியூபில் 2024 ஆம் ஆண்டில் அதி வேகமாக பார்வையாளர்கள் பெற்ற இசை வீடியோவாக 'ஆப்ட்' மாறிவிட்டது. இந்த சாதனையை கொண்டாடும் ரோஸே, தனது இன்ஸ்டாகிராமில், ‘அப்பதூ அப்பதூ(APT) … 100 மில்லியன் காட்சிகள்?’ என்ற தலைப்பில் ஒரு செல்ஃபி வெளியிட்டுள்ளார்.

இந்த பாடல் ஆப்பிள் மியூசிக் யு.எஸ் பாப் விளக்கப்படங்களில் 4 வது இடத்திற்கு உயர்ந்திருக்கிறது. இதற்கு முன் பி.டி.எஸ்-ன் ஜுங்கூக்கின் முந்தைய பதிவு இந்த சாதனை படைத்தது. ஆப்பிள் மியூசிக் யு.எஸ்-ஸில் முதல் 10 இடங்களைப் பிடித்த இரண்டாவது கே-பாப் கலைஞராகவும் ரோஸே தற்போது உயர்ந்திருக்கிறார்.

'APT' உலகளாவிய ஸ்பாட்டிஃபை தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றது மற்றும் முதல் 24 மணி நேரத்தில் 25.24 மில்லியன் பார்வைகளுடன் யூடியூப் ரெக்கார்ட்ஸை உடைத்தது. இது 2024 ஆம் ஆண்டில் ஒரு கொரிய தனிப்பாடலுக்கு மிகப்பெரிய அறிமுகமாகும். இந்த பாடல் பல்வேறு தளங்களில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது.

உலகளவில் மிகவும் செல்வாக்குமிக்க கே-பாப் தனி கலைஞர்களில் ஒருவராக ரோஸேவை (APT) பாடல் உறுதிப்படுத்தியுள்ளது. ரோஸே மற்றும் புருனோ மார்ஸின் ஆப்ட் பாடல், ஒரே நாளில் ஸ்பாட்டிஃபையில் 14.59 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. இது ஜூலை 19 அன்று வெளியான ஒரு நாளில் 10.6 மில்லியன் ஸ்ட்ரீம்கள் பெற்ற பி.டி.எஸ் ஜிமினின் சாதனையை முறியடித்துள்ளது.

இதற்கிடையில், இப்போதைக்கு, 'ஆப்ட்'(APT) ஸ்பாட்டிஃபையில் 100 மில்லியன் பார்வைகளை குவித்துள்ளது. கூடுதலாக, இந்த பாடல் உலகளாவிய ஸ்பாட்டிஃபை தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்ததுள்ளது, இதன் மூலம் இந்த சாதனையை படைத்த முதல் கே-பாப் பெண் ஆர்ட்டிஸ்ட் ஆகிறார் ரோஸே .

APT, தற்போது US iTunes இல் 63 நாடுகளில் நம்பர் 1 இடத்தைப் பெற்றுள்ளது. Global Spotify, MelOn மற்றும் Genie உட்பட 13 தளங்களில் இது நம்பர் 1 பாடலாக உருவெடுத்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, "APT" தொடர்ந்து நான்கு நாட்களாக Global Spotify இல் நம்பர் 1 இல் உள்ளது . இது 2 மில்லியனுக்கும் அதிகமான ஸ்ட்ரீம்களுடன் தொடர்ந்து நான்காவது நாளாக US Spotify இல் முதலிடத்தில் உள்ளது.

BLACKPINK: `BTS மட்டுமல்ல... இவர்களும் கொரியாவின் அடையாளம்தான்' - பிளாக்பிங்க் பெண்கள் குழுவின் கதை

இன்று உலகம் முழுவதும் கே கலாசாரம் என்கிற கொரியன் கலாசார மோகம் மக்களுக்கு உள்ளது. இதற்கு முக்கிய காரணம் கே டிராமா மற்றும் கே பாப் இசைக்குழுக்கள்தான். உலகம் முழுவதும் பிடிஎஸ் இசைக்குழு எவ்வளவு பிரபலமோ அ... மேலும் பார்க்க

Krishnakumar Kunnath - KK (கிருஷ்ணகுமார் கண்ணதாசன்) பாடகர்

கிருஷ்ணகுமார் கண்ணதாசன் (KK)பிறப்பு: 1968, சென்னை, இந்தியாஇறப்பு: 31 மே 2022கோடைச் சொற்கள்: இந்திய இசை, பாடகர், இசையமைப்பாளர்மருத்துவம்: கிருஷ்ணகுமார் கண்ணதாசன் (KK) தமிழில் அதிகம் பரபரப்பாக பேசப்படும... மேலும் பார்க்க