செய்திகள் :

BMW கார் விபத்து வழக்கில் கைதான பெண், திகார் சிறையில் அடைப்பு; நடந்தது விபத்தா, கொலையா!?

post image

தலைநகர் டெல்லியில் பிஎம்டபிள்யூ சொகுசு கார் ஏற்படுத்திய விபத்தில், நிதி அமைச்சகத்தில் பணியாற்றி வந்த நவ்ஜோத் சிங் (வயது 52) என்ற அதிகாரி பலியான சம்பவம் பெரும் பேசுபொருளாக வெடித்திருக்கிறது.

இந்த விபத்தின் விசாரணையில் காரை ஓட்டி, விபத்தை ஏற்படுத்தியது பெண் தொழில் அதிபரான ககன்தீப் கவுர் (வயது 38) என்பது தெரிய வந்தது.

BMW கார் விபத்து, நவ்ஜோத் சிங்
BMW கார் விபத்து, நவ்ஜோத் சிங்

விபத்தின் பின்னணி

டெல்லியில் மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதாரத் துறையில் துணைச் செயலாளராக பணிபுரிந்து வரும் நவ்ஜோத் சிங் (52) மற்றும் அவரின் மனைவி இருவரும் விடுமுறையையொட்டி இந்திய தேர்தல் கமிஷன் அலுவலகம் அமைந்துள்ள சாலையில் இருக்கும் பங்களா சாஹிப் குருத்வாரா கோயிலுக்குச் சென்றுவிட்டு பைக்கில் வீட்டுக்குத் திரும்பியிருக்கின்றனர்.

அப்போது திடீரென குறுக்கே வந்த பிஎம்டபிள்யூ சொகுசு கார், இவர்களின் பைக் மீது மோதியதில் நவ்ஜோத் சிங் உயிரிழந்தார்.

விசாரனையில் நவ்ஜோத் சிங் மனைவி, "விபத்து நடந்தவுடன் என் கணவர் உயிருடன் இருந்தார். அவரைக் காப்பாற்ற அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல எவ்வளவோ கெஞ்சி கேட்டும் விபத்தை ஏற்படுத்திய பெண் அதனை மறுத்துவிட்டார்." என்று வாக்குமூலம் கொடுத்தது கேட்போர் மனதை உலுக்கியிருந்தது.

BMW கார் விபத்து வழக்கு
BMW கார் விபத்து வழக்கு

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸார், காரை ஓட்டிய ககன்தீப் கவுரை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். நீதிமன்றம் ககன்தீப் கவுரை இரண்டு நாள்கள் நீதிமன்றக் காவலில் திஹார் சிறையில் வைக்க உத்தரவிட்டிருக்கிறது. செப்டம்பர் 17ம் தேதி மீண்டும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெறும் எனக் கூறப்பட்டிருக்கிறது.

கொலையா, விபத்தா?

இதற்கிடையில் பிஎம்டபிள்யூ கார் ஓட்டுநர் ககன்தீப் கவுரின் வழக்கறிஞர் விகாஸ் பஹ்வா, "ஜாமீன் கூட கொடுக்காமல் ககன்தீப் கவுரை நீதிமன்றக் காவலில் வைத்திருக்கின்றனர். நடந்தது விபத்து, ஆனால் இதைக் கொலை வழக்காக கொண்டு செல்ல முயற்சிக்கிறார்கள். விபத்து நடந்த 45 நிமிடத்தில் பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை பெற்றார். ஆனால், படுகாயமடைந்ததன் காரணமாக அவர் உயிரிழந்தார். இது முற்றிலும் விபத்து.

விபத்தான BMW கார்
விபத்தான BMW கார்

ககன்தீப் கவுர் காரில் அவரின் கணவர், குழந்தைகள் இருந்தனர். அதனால் அவர் காரை நிச்சயமாக வேகமாகவோ, ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலோ ஓட்டியிருக்க மாட்டார். விபத்து தொடர்பான சிசிடிவி காணொலிகள் கிடைத்தால் இதை உறுதி செய்ய முடியும். நடந்தது விபத்துதான் என்பதை நாங்கள் சட்டப்படி நிரூபிப்போம்" என்று பேசியிருக்கிறார்.

செப்டம்பர் 17ம் தேதி மீண்டும் இந்த வழக்குத் தொடர்பான விசாரணை நடைபெறுகிறது. அதில் சிசிடிவி காணொலிகள் மற்றும் விபத்தின் ஆதாரங்கள் அனைத்தும் உறுதிசெய்யப்பட்டு நீதிமன்ற விசாரணை நடக்கவிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

சென்னை: பெண் தொழிலதிபரிடம் ரூ.10.89 கோடி மோசடி - தம்பதி, வழக்கறிஞர் கைது!

சென்னை, வானகரத்தில் நகைக்கடை நடத்தி வருபவர் ஸ்ரீதேவி (50). இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 11.06.2025-ம் தேதி புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், ``சென்னை அண்ணா நகரில் வசித்து வரும் சுனிதா பிரக... மேலும் பார்க்க

`அப்பாவை ரிலீஸ் செய்றேன்' - சிறுமிக்கு நேர்ந்த அநீதி; பாலியல் வன்கொடுமை செய்த தனிப்பிரிவு ஏட்டு கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் அமைந்திருக்கிறது கரியாலூர் காவல் நிலையம். இந்தக் காவல் நிலையத்தில் செயல்பட்டு வந்த ஒரு பெட்டிக் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை ... மேலும் பார்க்க

விருதுநகர்: "பாறையாக உள்ள பட்டா நிலத்தை மாற்றி தாங்க" - தீக்குளிக்க முயன்ற பெண்; பின்னணி என்ன?

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மொட்டை மலை, பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பூங்கொடி. இவருக்கு அப்பகுதியில் அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியது. ஆனால், "அந்த இடம் முழுவதும் பாறையாக... மேலும் பார்க்க

கடத்தப்பட்ட லாரி கிளீனர்; டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் பூஜா வீட்டில் மீட்ட போலீஸ்... என்ன நடந்தது?

மும்பை அருகில் உள்ள நவிமும்பை ரபாலே என்ற இடத்தில் சிமெண்ட் மிக்‌ஷர் லாரி ஒன்று மேம்பாலத்தில் சென்றபோது அந்த வழியாக வந்த கார் மீது லேசாக உரசிச்சென்றது. இதனால் கார் டிரைவருக்கும், சிமெண்ட் மிக்‌ஷரில் இர... மேலும் பார்க்க

உபி: "வெறுத்துப்போய் இம்முடிவை எடுத்தேன்" - விவாகரத்து கொடுக்காத கணவனைக் கொன்ற மனைவி; என்ன நடந்தது?

உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் என்ற இடத்தில் வசித்தவர் நாகேஷ்வர். இவரது மனைவி நேகா. இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. நாகேஷ்வர் அவர் வசித்த இடத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நெடுஞ்ச... மேலும் பார்க்க

தூத்துக்குடி: மதுபோதையில் தகராறு; பிளேடால் தந்தையின் கழுத்தை அறுத்துக் கொடூரமாக கொலை செய்த மகன்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊரணி பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி. கொத்தனாராக வேலை செய்து வந்தார். இவருடைய மகன் ராகுல் காந்தி பெயிண்டராக வேலை செய்து வருகிறார். தந்தை–மகன் இருவருக்கும் மது அருந்தும... மேலும் பார்க்க