எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது: உச்சநீதிமன்றம...
Career: 'இன்ஜினீயர் படித்தவர்களுக்கு 588 காலிப்பணியிடங்கள்' - எங்கு, எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பயிற்சி வேலைவாய்ப்பு அறிக்கை வெளியீடு.
என்ன வேலை?
மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், சிவில், இன்ஸ்ட்ரூமென்டேஷன், கெமிக்கல், மைனிங், கணினி அறிவியல், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொடர்பு ஆகிய இன்ஜினீயரிங் துறைகளில் பட்டப்படிப்பு பயிற்சிப் பணி மற்றும் டெக்னிக்கல் பயிற்சிப் பணி.
நர்சிங்கிலும் பயிற்சிப் பணி மற்றும் டெக்னிக்கல் பயிற்சிப் பணி.
மொத்த காலிப்பணியிடங்கள்: 588
வயது வரம்பு: தொழிற்பயிற்சி சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் வயது.
உதவித்தொகை: ரூ.12,524 - 15,028
கல்வி தகுதி:
பட்டப்படிப்பு பயிற்சி பணிக்கு...
தொழில்நுட்பம் அல்லது இன்ஜினீயர் துறைகளில் பட்டப்படிப்பு.
நர்சிங்கில் இளங்கலை.
டெக்னிக்கல் பயிற்சி பணிக்கு...
தொழில்நுட்பம் அல்லது இன்ஜினீயர் துறைகளில் டிப்ளமோ படிப்பு.
எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்?
பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோவில் பெற்றுள்ள மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
யார் யார் விண்ணப்பிக்கலாம்?
தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, நிரப்பிய விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு பிரின்ட் எடுத்து
The General Manager,
Learning and Development Centre,
Block-20, NLC India Limited, Neyveli - 607 803
என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். கூடவே, கீழே கூறப்பட்டிருக்கும் சான்றிதழ் நகல்களும் விண்ணப்பத்துடன் சேர்த்து அனுப்ப வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 23, 2024.
தபாலில் விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: ஜனவரி 3, 2025.
விண்ணப்பிக்கும் இணையதளம்:www.nlcindia.in
மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.