Career: விளையாட்டு வீரரா நீங்கள்... எல்லை பாதுகாப்புப் படையில் காவலர் பணி - தகுதிகள் என்னென்ன?
ஸ்போர்ட்ஸ் கோட்டாவின் கீழ், எல்லை பாதுகாப்பு படையில் பணி.
என்ன பணி?
கான்ஸ்டபிள் பணி.
மொத்த காலி பணியிடங்கள்: 275 (ஆண்கள்: 127; பெண்கள்: 148)
சம்பளம்: ரூ.21,700 - 69,100
வயது வரம்பு: 18 - 23 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
கல்வித் தகுதி: பள்ளிப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
என்னென்ன விளையாட்டிற்கு இந்த கோட்டா?
வில் வித்தை, தடகளம், பாட்மிண்டன், நீச்சல், டைவிங், கூடைப்பந்து, குத்துச்சண்டை, சைக்கிளிங் உள்ளிட்ட 27 விளையாட்டுகள் இந்தப் பணிக்குள் அடங்கும்.
எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்?
உடல் தகுதி தேர்வு மற்றும் பதக்கங்கள் அடிப்படையில் முன்னுரிமை கொடுக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 30, 2024
விண்ணப்பிக்கும் இணையதளம்:rectt.bsf.gov.in
மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.