1993ல் கடத்தப்பட்ட சிறுவன் 30 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்தினருடன் சேர்ந்ததன் ப...
Champions Trophy : 'இந்திய அணி பாகிஸ்தானுக்கு வர மறுப்பதில் நியாயமில்லை' - PCB சேர்மன் காட்டம்
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ஆட பாகிஸ்தானுக்கு செல்லமாட்டோம் என பிசிசிஐ முடிவெடுத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபியை நடத்துவதைப் பற்றி ஐ.சி.சியின் நிர்வாகக்குழு நாளை கூடி முடிவெடுக்கவிருக்கிறது. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தலைவர் மோஷின் நக்வி பத்திரிகையாளர் சந்திப்பில் பரபரப்பாக சில கருத்துகளை பேசியிருக்கிறார்.
பத்திரிகையாளர்களிடம் பேசிய மோஷின் நக்வி, 'பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு எது நல்லதோ அதைத்தான் நாங்கள் செய்வோம். நாங்கள் ஐ.சி.சியின் சேர்மனுடன் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம். நாங்கள் எங்களின் முடிவில் உறுதியாக இருக்கிறோம். பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு சென்று கிரிக்கெட் ஆடும். ஆனால், இந்திய அணி பாகிஸ்தானுக்கு வராது என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. எந்த முடிவாகினும் அனைவரையும் சமமாக மதித்து எடுக்க வேண்டும் என ஐ.சி.சியிடம் தெளிவாக கூறியிருக்கிறோம். இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லையெனில், வருங்காலங்களில் பாகிஸ்தான் அணியும் இந்தியாவுக்கு செல்ல வாய்ப்பில்லை.' என காட்டமாக பேசியிருக்கிறார்.
ஹைப்ரிட் முறையில் இந்தியா ஆடும் ஆட்டங்களை மட்டும் துபாயில் நடத்த வேண்டும் என்பது பிசிசிஐயின் விருப்பம். அதற்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்ட் மறுப்பு தெரிவித்திருக்கிறது. நாளை ஐ.சி.சி நடத்தவிருக்கும் முக்கியமான சந்திப்பில்தான் சாம்பியன்ஸ் டிராபி விவகாரத்தில் ஒரு முடிவு கிடைக்கும் என தெரிகிறது.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் மோதலைப் பற்றிய உங்களின் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள்!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...