செய்திகள் :

Champions Trophy Table : நீண்ட இழுபறிக்கு பின் வெளியான சாம்பியன்ஸ் டிராபி அட்டவணை - முழு விவரம்

post image
நீண்ட இழுபறிக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான போட்டி அட்டவணையை ஐ.சி.சி வெளியிட்டிருக்கிறது. இந்திய அணி ஆடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் வைத்தே நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
Champions Trophy 2025 - இந்தியா, பாகிஸ்தான்

2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் வைத்து நடக்கும் என 2021 ஆம் ஆண்டே முடிவு செய்யப்பட்டுவிட்டது. ஆனால், பிசிசிஐ இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுப்பு தெரிவித்தே வந்தது. பாகிஸ்தான் தரப்பில் எங்கள் அணி மட்டும் இந்தியாவுக்கு சென்று ஆடுகிறது. அவர்கள் மட்டும் பாகிஸ்தான் வரமாட்டார்களா எனும் வாதம் முன்வைக்கப்பட்டது. பிசிசிஐ தரப்பில் இந்தியா ஆடும் போட்டிகள் மட்டும் பொதுவான ஒரு மைதானத்தில் நடத்தப்பட வேண்டும் என கேட்கப்பட்டது. இதனால்தான் சாம்பியன்ஸ் டிராபி அட்டவணையை அறிவிப்பதில் ஐ.சி.சி தாமதப்படுத்தி வந்தது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு பிசிசிஐயின் கோரிக்கையை ஐ.சி.சி ஏற்றது. இந்தியா ஆடும் போட்டிகளை மட்டும் துபாயில் நடத்திக் கொள்ளலாம் என முடிவெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான போட்டி அட்டவணையை ஐ.சி.சி இப்போது வெளியிட்டுள்ளது.

மொத்தமாக 15 போட்டிகள் நடைபெறவிருக்கிறது. பாகிஸ்தானில் கராச்சி, லாகூர், ராவல்பிண்டி என மூன்று மைதானங்களிலும் அதுபோக இந்தியா ஆடும் போட்டிகள் துபாயிலும் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கும் தொடர் மார்ச் 9 வரை நடக்கவிருக்கிறது. இந்திய அணி பிப்ரவரி 20, 23 ஆகிய தேதிகளில் வங்கதேசத்தையும் பாகிஸ்தானையும் எதிர்கொள்கிறது. மார்ச் 2 ஆம் தேதி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

Champions Trophy

ஒரு அரையிறுதி துபாயிலும் இன்னொரு அரையிறுதி லாகூரிலும் நடக்கிறது. பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதிபெறும்பட்சத்தில் அந்த அணி ஆடும் அரையிறுதிப் போட்டி லாகூரில் நடக்கும். பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றால் லாகூரிலும் இல்லையெனில் இறுதிப்போட்டி துபாயிலும் நடைபெறும் என அறிவித்திருக்கிறார்கள்.

Ind vs Aus: சீனியர் வீரர்கள் இருக்கும்போது தனுஷை டீமில் எடுத்தது ஏன்? - ரோஹித் சர்மா விளக்கம்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் மூன்றாவது போட்டியுடன் இந்திய அணியின் நட்சத்திர வீரரான அஷ்வின் ஓய்வு முடிவை அறிவித்தார்.இந்நிலையில் அஷ்வினுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் தனுஷ் கோட்... மேலும் பார்க்க

Dhoni ஏன் தனித்துவமான கேப்டன்? - அஷ்வின் சொன்ன சுவாரஸ்ய பதில்

தலைசிறந்த கேப்டனாக புகழப்படும் எம்.எஸ்.தோனியின் எந்த பண்பு அவரை மற்ற கேப்டன்களிடமிருந்து தனித்தவராகக் காட்டுகிறது எனக் கூறியுள்ளார் ரவிசந்திரன் அஷ்வின். 2007ல் டி20 உலகக்கோப்பை, 2011ல் ஐசிசி கிரிக்கெட... மேலும் பார்க்க

Tanush Kotian: அஷ்வின் ஓய்வு; ஆஸி., புறப்பட்ட தனுஷ் கோட்டியன் யார்? ; உள்ளூர் ரெக்கார்டு என்ன?

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் மூன்றாவது போட்டியுடன் இந்திய அணியின் நட்சத்திர வீரரான அஷ்வின் ஓய்வு முடிவை அறிவித்தார்.இந்நிலையில் அஷ்வினுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் தனுஷ் கோட்... மேலும் பார்க்க

20 Years of Dhoni: `தலைமுறைகளின் கனவை நிஜமாக்கிய நாயகன்' - ஒரு விரிவான பார்வை

ஒரு பயணத்தை எப்படி தொடங்குகிறோம் என்பது முக்கியமல்ல. அதை எப்படி முடிக்கிறோம் என்பதுதான் முக்கியம். இந்தக் கதையாடலுக்கு உதாரணமாக சொல்ல உகந்த பெயர் தோனிதான்.Dhoni சரித்திரத்தின் தொடக்கம்2004 டிசம்பர் 23... மேலும் பார்க்க

Ashwin: "இக்கட்டான தருணங்களில் கூட..." - அஷ்வினுக்கு உருக்கமாகக் கடிதம் எழுதிய மோடி

நடந்துகொண்டிருக்கும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் மூன்றாவது டெஸ்ட் மழை பாதிப்பால் டிராவில் முடிந்திருக்கிறது. இந்நிலையில் திடீரென தன் ஓய்வை அறிவித்திருந்தார் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ரவ... மேலும் பார்க்க

21 ஆம் நூற்றாண்டில் எந்த அணியும் செய்யாத சாதனை.. தென்னாப்பிரிக்காவில் அசத்திய பாகிஸ்தான்!

கிரிக்கெட் வரலாற்றில் இந்த 21-ம் நூற்றாண்டில் தென்னாப்பிரிக்காவில் எந்தவொரு அணியும் செய்யாத சாதனையைப் பாகிஸ்தான் அணி நிகழ்த்திக் காட்டியிருக்கிறது.பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர... மேலும் பார்க்க