செய்திகள் :

CJI கவாய் மீது காலணி வீசிய வழக்கு: ராகேஷ் கிஷோர் மீது நடவடிக்கை எடுக்க மறுத்த நீதிமன்றம் - ஏன்?

post image

இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது ராகேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர் காலணி வீசி தாக்குதல் நடத்தமுயன்ற வழக்கில், வழக்கறிஞருக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 6ம் தேதி நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் சங்கம் மனு தாக்கல் செய்திருந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜோய்மல்யா பக்சி அடங்கிய அமர்வு, தலைமை நீதிபதியே தனிப்பட்ட முறையில் மன்னிப்பு வழங்கிய பிறகு அதிகாரப்பூர்வமான விசாரணையை நடத்துவது நியாயமானதா எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜோய்மல்யா பக்சி

திங்கட்கிழமை (அக்டோபர் 27) நடைபெற்ற விசாரணையில், உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் சங்கம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் விகாஸ் சிங், "தலைமை நீதிபதி முதலில் வழக்கு தொடர வேண்டாம் என்று முடிவு செய்தார். ஆனால் கிஷோர் பின்னர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்து, 'தனது செயலுக்கு பெருமைப்பட்டு' அதை மீண்டும் செய்வேன் என்றும் தெரிவித்தார்." என வாதாடினார்.

மேலும், "நடந்த சம்பவம் பெருமைக்குரியதாக மாற்றப்படுகிறது... இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க நீதிமன்றத்துக்கு போதுமான அதிகாரம் உள்ளது.” என்றும் கூறினார்.

விகாஸ் சிங்கின் வாதத்தைக் கேட்ட நீதிபதி சூர்யா காந்த், "கிஷோர் செய்தது கடுமையான குற்றவியல் அவமதிப்பு... ஆனாலும் நீதிபதி ஏற்கனவே மன்னித்த நிலையில், நீதிமன்றம் இதைத் தொடர வேண்டுமா" எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு விகாஸ் சிங், "நீதிபதி அவரை மன்னித்ததாகக் கூறியது அவரது தனிப்பட்ட முடிவு மட்டுமே. நீதித்துறையின் சார்பானது அல்ல... மக்கள் இதைக் கூறி நகைக்கின்றனர்... அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால், அவரை சிறைக்கு அனுப்புங்கள்." எனக் காட்டமாக பதிலளித்தார்.

நீதிபதி மீது காலணி வீச முயன்ற ராகேஷ் கிஷோர்
நீதிபதி மீது காலணி வீச முயன்ற ராகேஷ் கிஷோர்

கைவிடப்பட்ட குற்றவியல் நடவடிக்கை

காலணி வீசிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நீதிபதி அவமதிப்பு நடவடிக்கை எடுக்க விரும்பாத சூழலில் வேறு அமர்வுகள் நடவடிக்கை எடுப்பது சரியா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

நீதிபதி ஜோய்மல்யா பக்சி, "அவமதிப்பு நடவடிக்கை எடுக்கலாமா வேண்டாமா என்பதை சம்பந்தபட்ட நீதிபதியின் விருப்பத்துக்கே விட்டுவிடலாம்" எனக் கூறினார்.

தாக்குதல் நடந்த அன்றே "இது என்னைப் பாதிக்காது" என தனது வேலைகளைத் தொடர்ந்தார் நீதிபதி கவாய். பின்னர் இந்த சம்பவத்தை "மறக்கப்பட்ட அத்தியாயம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கறிஞர் விகாஸ் சிங், அக்டோபர் 6 தாக்குதலுக்கு பிறகான ராகேஷ் கிஷோரின் நடவடிக்கைகளையும், ஊடகங்களில் தான் செய்ததை பெருமைக்குரியதாக பறைசாற்றி பேசியது உள்ளிட்டவற்றைக் குற்றமாக கருதலாம் என வாதாடினார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கை எடுப்பதைக் கைவிட்டு, இதுபோன்ற செயலை பெருமைக்குரியதாக கருதுவதைத் தடுக்க வழிமுறைகளை உருவாக்குவது குறித்து பார்க்கலாம் என்றதாக லிவ் லா தளம் கூறுகிறது.

`கர்நாடகம், உத்தரவை கடைபிடிக்கவில்லை எனில்.!’ - காவிரி வழக்கில் அதிரடி காட்டிய உச்ச நீதிமன்றம்

மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்க கோரி கர்நாடக அரசு தொடர்ந்த வழக்கும், மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடகாவின் திட்ட வரைவு அறிக்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக... மேலும் பார்க்க

``கோமாவில் இறந்தவர், பாலிசி காலாவதியை ஏற்க முடியாது'' - மனைவிக்கு ரூ.1 கோடி வழங்க நீதிமன்றம் உத்தரவு

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் வசித்து வருபவர் விசாலாட்சி. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். விசாலாட்சியின் கணவர் சரவணன் ரெங்கநாதன், தனியார் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 30 ஆண்டுகளுக்கு ரூ.1 கோடி மதிப்... மேலும் பார்க்க

2-வது திருமணத்தை பதிவுசெய்ய முதல் மனைவி சம்மதம் வேண்டும்; கேரள ஐகோர்ட் கூறிய தீர்ப்பு

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முஹம்மது ஷெரீப் (44). 2017-ம் ஆண்டு காசர்கோட்டைச் சேர்ந்த ஆபிதா (38) என்ற பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார். முதல் மனைவியை விவாகரத்து செய்யாத நில... மேலும் பார்க்க

கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறையின் நடவடிக்கை சரியானதுதான் - PMLA உத்தரவு

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகளை, அமலாக்கத்துறை முடக்கியது சரியானதுதான் என்று 'பணமோசடி தடுப்புச்சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம்' (PMLA) உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. அம... மேலும் பார்க்க

கரூர் மாவட்ட கோயில்களின் சொத்து ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? விவரம் கேட்கும் உயர்நீதிமன்றம்

கரூர் மாவட்ட கோயில்களின் சொத்து ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, அரசுத்தரப்பில் விவரம் கேட்டுள்ளது .இந்து சமய அறநிலையத்துறைசேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் ச... மேலும் பார்க்க

பள்ளிக்கரணை : `சதுப்பு நிலத்தில் கட்டடம் கட்ட இடைக்கால தடை’ - உயர் நீதிமன்றம் அதிரடி

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பன்னடுக்கு குடியிருப்பு வளாகம் கட்ட சிஎம்டிஏ அனுமதி அளித்துள்ளதாக சர்ச்சை எழுந்த நிலையில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் இதற்கு கண்டனம் தெரிவித்தன.இதனையடுத்து, `சதுப... மேலும் பார்க்க