செய்திகள் :

Coolie: ரஜினியின் காலில் விழுந்த லோகேஷ், அனிருத்; ஆமீர் கானின் மாஸ் என்ட்ரி; கூலாக வந்த சௌபின்!

post image

"அரங்கம் அதிரட்டுமே, விசிலு பறக்கட்டுமே" எனக் கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எனெர்ஜிடிக்காக என்ட்ரி கொடுத்துள்ளார் ரஜினிகாந்த்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் கூலி. இதில் நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், உபேந்திரா, சத்தியராஜ், ஷ்ருதி ஹாசன் மற்றும் ஆமீர் கான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்குத் தயாரிப்பாளர் கலாநிதி மாறனுடன் வந்திறங்கினார் ரஜினிகாந்த்.

பின்னர் நடிகர்கள் ஒவ்வொருவரையும் கை குலுக்கி வரவேற்றார். அனிருத் மற்றும் லோகேஷ் கனகராஜ் ரஜினியின் காலைத் தொட்டு வணங்கியபோது, இருவரையும் கட்டியணைத்தார். பாலிவுட் நட்சத்திரம் ஆமீர் கானையும் கட்டியணைத்து வரவேற்றார்.

Coolie இசை வெளியீட்டு விழா:

கருப்பு குர்தா மற்றும் நீல ஜீன்ஸில் ரஜினியின் மாஸ் என்ட்ரி

நடிகர்களை வரவேற்ற பிறகு தனது அண்ணன் சத்யநாராயண ராவின் கால்களைத் தொட்டு வணங்கினார் ரஜினிகாந்த்.

ஆமீர்கான் கூலி படத்தில் அவரது கதாபாத்திரமான 'தாஹா' போலவே கருப்பு உடையணிந்து வந்திருந்தார்.

கோட் சூட்டில் ஸ்டைலிஷாக வந்த நாகர்ஜுனா!

கன்னட நடிகர் உபேந்திரா உற்சாகமாக வருகை தந்தார்!

கான்சர்ட் மோடில் கலக்கிய இசையமைப்பாளர் அனிருத்! மேடையில் சிட்டு பாடலும் பாடி அசத்தியிருக்கிறார்.

மோனிக்கா பாடலில் குத்தாட்டம் போட்ட சௌபின் கூலாக வந்திறங்கினார்!

கருப்பு நிற சாடின் புடவையில் புன்னகை ததும்ப என்ட்ரி கொடுத்தார் ஷ்ருதி ஹாசன்!

நடிகர்கள் எல்லோரும் கருப்பு உடையில் வந்திருக்க வெள்ளை சட்டையில் ஸ்டைலாக வந்தார் லோகேஷ்!

Coolie ட்ரெய்லர்

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Coolie: மாஸ் என்ட்ரி கொடுத்த ரஜினிகாந்த் முதல் பவ்யமாக நிற்கும் லோகேஷ் வரை | Photo Album

Coolie: "வெங்கட் பிரபு அஜித்துக்கு ஒரு வசனம் எழுதியிருப்பார்; அது மாதிரிதான் நாகர்ஜுனா" - ரஜினிசினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglRசினிமா தொடர்பான எ... மேலும் பார்க்க

Coolie: "அன்றுதான் முதல் முறையாக நான் அழுதேன்" - தனது கூலி வேலை நாட்கள் அனுபவத்தை பகிரும் ரஜினி!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'கூலி' திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரம... மேலும் பார்க்க

Nagarjuna: " 'கூலி' திரைப்படம், 100 'பாட்ஷா' படங்களுக்கு சமமானது!" - நாகர்ஜூனா

லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'கூலி' திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில்... மேலும் பார்க்க

Anirudh: " 'கூலி' நிச்சயமாக பந்தயம் அடிக்கும்!" - அனிருத்

லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'கூலி' திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில்... மேலும் பார்க்க

Aamir Khan: "நான் இப்படத்திற்கு கதை, பணம் என எதையும் கேட்கவில்லை, காரணம்" - ஆமீர் கான் ஓப்பன் டாக்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'கூலி' திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தி... மேலும் பார்க்க

Coolie: "வெங்கட் பிரபு அஜித்துக்கு ஒரு வசனம் எழுதியிருப்பார்; அது மாதிரிதான் நாகர்ஜுனா" - ரஜினி

லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'கூலி' திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்... மேலும் பார்க்க