செய்திகள் :

CSK vs RCB : 'பெங்களூருவுக்கு எதிராக பதிரனா ஆடுவாரா?' - ப்ளெம்மிங் கொடுத்த அப்டேட்

post image

'சென்னை Vs பெங்களூரு'

18 வது ஐ.பி.எல் சீசனில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடக்கவிருக்கிறது. போட்டிக்கு முன்பாக இன்று இரு அணி வீரர்களும் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். போட்டிக்கு முன்பான பத்திரிகையாளர் சந்திப்புக்கு சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெம்மிங் வந்திருந்தார். அவர் பேசிய முக்கியமான விஷயங்கள் இங்கே.

Flemming
Flemming

"ருத்துராஜ் நம்பர் 3 இல் இறங்க வேண்டும் என்பது அவர் எடுத்த முடிவா அல்லது அணி நிர்வாகம் எடுத்த முடிவா?"

"இப்படியான முடிவுகளெல்லாம் எல்லாருடனும் கலந்து பேசி கேப்டன் எடுக்கும் முடிவே. நாங்கள் எல்லாவற்றையும் யோசித்துதான் ஏல அரங்கிலேயே மூன்று சீசன்களுக்கான அணியை எடுத்திருக்கிறோம்.

"பதிரனாவின் காயத்தைப் பற்றிய அப்டேட்?"

"பதிரனா வேகமாக குணமாகி வருகிறார்."

பதிரனா |Matheesha Pathirana

"மிடில் ஆர்டரில் ஏதேனும் மாற்றம் இருக்குமா? விஜய் சங்கர், ஆண்ட்ரே சித்தார்த் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா?"

"நாங்கள் ஒரே ஒரு போட்டியில்தான் ஆடியிருக்கிறோம். அந்தப் போட்டியையும் வென்றிருக்கிறோம். அதனால் பெரிதாக மாற்றங்கள் இருக்காது."

"பெங்களூரு அணி கோலியையும் ரஜத் பட்டிதரையும் அதிகம் சார்ந்திருக்கிறதோ?"

"ஒரு போட்டிதான் முடிந்திருக்கிறது. இப்போது எதையும் சொல்ல முடியாது. சீசன் செல்ல செல்ல நிலைமை எப்படி வேண்டுமானாலும் மாறலாம். இரண்டு அணிகளும் கடந்த சீசனில் இருந்ததை விட வேறாக இருக்கின்றன. அதனால் கடந்த கால ரெக்கார்டுகளை பற்றி யோசிக்கவில்லை. கோலி அந்த அணியின் மிகப்பெரிய வீரர்தான்."

மேலும் பேசியவர், 'ரச்சின் ரவீந்திரா கடந்த ஓராண்டில் நிறையவே வளர்ந்திருக்கிறார். மும்பைக்கு எதிராக அவர் ஆடியது அவரின் மிகச்சிறந்த இன்னிங்ஸ்களுள் ஒன்று.' என்றார்.

GT vs MI : 'எங்க பேட்டர்ஸ்தான் சொதப்புறாங்க..' - தோல்விக்கு ஹர்திக் விளக்கம்

'மும்பை தோல்வி!'அஹமதாபாத் மைதானத்தில் குஜராத்துக்கு எதிரான போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோற்றிருக்கிறது. இலக்கை விரட்டிய மும்பை அணி மிக மோசமாக பேட்டிங் ஆடி வீழ்ந்திருக்கிறது. GT vs ... மேலும் பார்க்க

GT Vs MI : 'அடங்கிப்போன மும்பை; உள்ளூர் சூட்சமத்தோடு வென்ற குஜராத்' - என்ன நடந்தது?

மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி அஹமதாபாத்தில் நடந்து முடிந்திருக்கிறது. குஜராத்தில் சமயோஜிதமான பௌலிங்கை சமாளிக்க முடியாமல் மும்பை அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் தோற... மேலும் பார்க்க

GT vs MI : 'மும்பை அணியில் இடம் பெறாத இளம் வீரர் விக்னேஷ் புத்தூர்!' - ஏன்?

சென்னைக்கு எதிரான போட்டியில் மும்பை அணியில் அறிமுக வீரராக களமிறங்கியிருந்த விக்னேஷ் புத்தூர் சிறப்பாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார். ஆனால், அந்த விக்னேஷ் புத்தூரை இப்போது நடந்து வரும் குஜரா... மேலும் பார்க்க

Ruturaj Gaikwad: 'ருத்துராஜ் நம்பர் 3 இல் இறங்கவே கூடாது!' - ஏன் தெரியுமா?

'ருத்துராஜ் - நம்பர் 3'பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி மிக மோசமாக தோற்றிருக்கிறது. அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் ஓப்பனிங் இறங்காமல் நம்பர் 3 இல் இறங்கி வருவதும் தோல்விக்கு மிக முக... மேலும் பார்க்க