செய்திகள் :

CSK செய்தது தேசநலனுக்கு எதிரானதா? - உத்தப்பாவின் விமர்சனமும் நிதர்சனமும்

post image
நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி ஒயிட் வாஷ் ஆகியிருக்கிறது. இந்தத் தொடரில் நியூசிலாந்து சார்பில் ரச்சின் ரவீந்திரா சிறப்பாக ஆடியிருந்தார். ரச்சின் ரவீந்திரா இந்தத் தொடருக்கு முன்பாக சென்னையிலுள்ள சிஎஸ்கே அணியின் அகாடெமியில் சிறப்புப் பயிற்சிகளை எடுத்திருந்தார். இந்த விஷயத்தை முன் வைத்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா இப்போது சிஎஸ்கே அணியைத் தேச நலனில் அக்கறை காட்டாத அணி என்பதைப் போலக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
ராபின் உத்தப்பா - சிஎஸ்கே

உத்தப்பா பேசியிருப்பதாவது, "எனக்கு எப்போதுமே சிஎஸ்கே அணி பிடித்த அணிதான். சென்னை அணியின் நிர்வாகம் எப்போதுமே தங்களுடைய வீரர்களுக்கு எல்லா விதத்திலும் உதவவே விரும்பும். ஆனாலும் இதற்கு வரைமுறை வைக்க வேண்டும். குறிப்பாக, வெளிநாட்டு வீரர்கள் இங்கே இந்தியாவுக்கு வந்து பயிற்சி செய்யும் விஷயத்தில் சென்னை அணி தங்களின் நலனை விடத் தேசத்தின் நலனையே முன் நிறுத்த வேண்டும்." எனக் கூறியிருக்கிறார்.

இந்தியராக இருந்துகொண்டு இந்தியாவின் லீக் தொடரில் ஒரு அணியை வழிநடத்திக் கொண்டு ஒரு வெளிநாட்டு வீரருக்கு அதுவும் இந்தியாவுக்கு எதிராகவே ஆடப்போகும் வீரருக்கு எப்படி உதவுவீர்கள் என்பதுதான் உத்தப்பாவின் கேள்வி. உத்தப்பா இவ்வளவு உணர்ச்சிவசப்படும் அளவுக்கு இது பெரிய பிரச்னையே இல்லை. ஏனெனில், வெளிநாட்டு வீரர் ஒருவர் வேறொரு நாட்டில் சென்று பயிற்சி பெற்று அதே நாட்டுக்கு எதிராகப் போட்டியிடும் கலாசாரம் கிரிக்கெட்டில் நீண்ட காலமாகவே இருக்கிறது.

சச்சின் தொடங்கி சாய் சுதர்சன் வரைக்கும் இந்தியாவின் பல வீரர்களுமே கவுண்ட்டி போட்டிகளில் ஆடியிருக்கிறார்கள். அங்கே அந்த அணிகளுடன் தங்கியிருந்து பயிற்சி முகாம்களிலும் கலந்துகொண்டிருக்கிறார்கள். கடைசியாக, இந்திய அணி இங்கிலாந்து சென்றிருந்தபோது, அத்தொடருக்கு முன்பாகப் பயிற்சிக்காக அஷ்வின் ஒரு கவுண்ட்டி அணிக்காக ஆடிவிட்டு வந்தார். இங்கிலாந்து அணி அதை ஒரு குற்றமாகலெல்லாம் பார்க்கவில்லை. மேலும், சில வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவின் உள்ளூர் போட்டிகளில் ஆடிய வரலாறும் இருக்கவே செய்கிறது.

Rachin Ravindra - ரச்சின்

நான்கு நாள்கள்தான் சென்னையில் தங்கிப் பயிற்சி முகாமில் கலந்துகொண்டிருந்தார் ரச்சின் ரவீந்திரா. அந்த நான்கு நாள்களில்தான் அவர் இந்தியாவுக்கு எதிரான சூட்சமங்கள் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டார் என்று சொல்ல முடியாது. அவர் ஏற்கனவே ஐ.பி.எல் இல் சென்னை அணிக்காக ஆடியிருக்கிறார். ஒரு வருடத்தில் 3 மாதங்களை இந்தியாவில் செலவிடுகிறார். இதுவே அவருக்குப் பெரிய பயிற்சிதான். இது ரச்சின் மற்றும் சென்னை சார்ந்த விஷயம் மட்டுமல்ல. டி20 லீக்குகளின் வருகைக்குப் பிறகு உள்ளூர் மண், வெளியூர் மண் என்கிற வாதமே அடிபட்டுக் கொண்டிருக்கிறது. எல்லா வீரர்களும் எல்லா நாடுகளிலும் தொடர்ந்து ஆடுகிறார்கள். அதிக நேரத்தை அந்த நாட்டின் சூழலில் செலவிடுகிறார்கள். இதனால் இயல்பிலேயே அந்நிய பிட்ச் என்கிற வாதம் அடிபடுகிறது. எல்லா வீரர்களுக்கும் எல்லா பிட்ச்களிலும் ஆடிய அனுபவமிருக்கிறது.

மேலும், இந்த டி20 லீக் கலாசாரம் நிறையப் புதுமைகளைப் புகுத்தி வருகிறது. இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் ஓப்பனிங் இறங்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சி முகாமில்தான் நியூபால்களை எதிர்கொண்டு சஞ்சு சாம்சன் பழகினார். லீக் அணிகளின் ஆதிக்கம் சர்வதேச கிரிக்கெட்டில் தாக்கம் செலுத்துவதைத் தவிர்க்கவே முடியாது. ஐ.பி.எல் இல் அணிகளை வைத்திருக்கும் பல நிறுவனங்களும் பல வெளிநாட்டு லீக்குகளில் அணிகளை வைத்திருக்கிறார்கள். இந்திய வீரர்கள் இங்கிலாந்திலோ தென்னாப்பிரிக்காவிலோ ஒரு தொடரில் ஆடுவதற்கு முன் ஒரு பயிற்சி முகாமில் பங்கேற்க வேண்டுமெனில் அவர்கள் சார்ந்த லீக் அணிகள் அதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கும்.

Sanju Samson

பி.சி.சி.ஐ இந்திய வீரர்களை வேறு லீக்கில் ஆட விடுவதில்லை. ஒருவேளை ஆட அனுமதித்தால் பார்டர் கவாஸ்கர் தொடருக்கு முன்பாக கோலிக்கும் ரோஹித்துக்கும் பிக்பாஷ் லீக்கின் அணிகள் கூட பயிற்சி முகாமை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும். கிரிக்கெட் எல்லைகளைக் கடந்து வேறொரு பாதையை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது. லீக் வடிவ கிரிக்கெட்டின் அறிமுகமும் வளர்ச்சியுமேதான் இதற்கு மிக முக்கிய காரணம்.

ஆக, தேச நலனோடு தொடர்புப்படுத்தி உத்தப்பா பேசும் அளவுக்கு இந்த விஷயத்தில் ஒன்றுமே இல்லை. சிஎஸ்கே செய்தது அத்தனை பெரிய குற்றமும் இல்லை.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

IPL Mega Auction: 'இந்தியா சிமெண்ட்ஸ் Vs ரிலையன்ஸ்' தோனியை CSK வாங்கிய கதை | 2008 Auction Rewind - 1

தோனி, இன்றைய தேதிக்கு இந்திய விளையாட்டுலகம் இதற்கு முன் கொண்டாடிடாத அளவுக்கு கொண்டாடப்படும் மாபெரும் வீரர். ஐ.பி.எல் என்கிற ஒரு கிரிக்கெட் லீகே அவரை நம்பியிருக்கிறது. அவருக்காக லீகின் விதிகளையே மாற்றி... மேலும் பார்க்க

Gambhir: 'இந்தியாவை விமர்சிக்க பாண்டிங் யார்?!' - கம்பீரின் கோபம் நியாயமானதா?

ஆஸ்திரேலியா புறப்பட்டு செல்வதற்கு முன்பு இந்திய அணியின் பயிற்சியாளார் கம்பீர் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அதில் ரிக்கி பாண்டிங் முன்வைத்த ஒரு விமர்சனம் பற்றிய கேள்விக்கு கம்பீர் அளித்த பதில் ... மேலும் பார்க்க

SAvInd : 'வீணான வருண் சக்கரவர்த்தியின் அசாத்திய பௌலிங்!' - தோல்விக்கு காரணமான அந்த 3 விஷயங்கள்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்ந்திருக்கிறது. முதல் போட்டியில் மிகச்சிறப்பாக ஆடி வென்ற நிலையில் இரண்டாம் போட்டியில் இந்தியா எங்கே சொத... மேலும் பார்க்க

Ashwin: 'இந்தியாவை விட நியூசிலாந்து தகுதியான அணியாக இருந்தது!' - ஒயிட் வாஷ் பற்றி அஷ்வின்!

நியூசிலாந்துக்கு எதிரான உள்ளூர் டெஸ்ட் தொடரை 0-3 என தோற்று ஒயிட் வாஷ் ஆகியிருக்கிறது இந்திய அணி. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே உள்ளூரில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் இந்திய அணி ஒயிட் வாஷ் ஆவத... மேலும் பார்க்க

Chepauk: `மற்ற மைதானங்களை விட சேப்பாக்கம்தான் பெஸ்ட்' - ஐ.சி.சி கொடுத்த அங்கீகாரம்

இந்திய அணியின் ஹோம் சீசனில் பயன்படுத்தப்பட்ட பிட்ச்களுக்கு ஐ.சி.சி வழங்கியிருக்கும் ரேட்டிங்கை பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதன்படி, இந்தியா ஆடிய 5 டெஸ்ட் போட்டிகளில் சேப்பாக்கத்தில் பயன்படுத்... மேலும் பார்க்க