புதுச்சேரி: `மாணவர்கள் மீதான வழக்கை உடனே திரும்பப் பெற வேண்டும் என எச்சரிக்கிறோம...
Dashvanth நிரபராதியா? | உச்ச நீதிமன்ற தீர்ப்பு சொல்வது என்ன? | Advocate Ajeetha detailed interview
2017-ம் ஆண்டு, சென்னை போரூரை அடுத்த மதனந்தபுரத்தில் 6 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கு அப்போது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட தஷ்வந்த் என்ற இளைஞருக்கு செங்கல்பட்டு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றமும் அந்தத் தண்டனையை உறுதி செய்தது.
இந்நிலையில், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது தஷ்வந்த் தரப்பு. அந்த வழக்கில், தஷ்வந்த் இந்தக் குற்றத்தைச் செய்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்று கூறி இந்த வழக்கிலிருந்து விடுவித்திருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
எதன் அடிப்படையில் தஷ்வந்த் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறித்து வழக்கறிஞர் அஜிதாவிடம் பேசினோம்.