குட் பேட் அக்லிதான் ஒரே நம்பிக்கை... புலம்பும் அஜித் ரசிகர்கள்!
Delhi Elections: அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியாவுக்கு `ஷாக்' கொடுத்த டெல்லி சட்டமன்றத் தேர்தல்!
டெல்லியில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு பதிவான சட்டமன்றத் தேர்தல் வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. இத்தேர்தல் முடிவுகள் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் அமைந்தது. பா.ஜ.க 50 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. இதன் மூலம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பா.ஜ.க டெல்லியில் ஆட்சியை பிடிக்கிறது. ஆம் ஆத்மி கட்சி 19 தொகுதியில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா ஜங்க்புரா தொகுதியில் போட்டியிட்டார். இதில் பா.ஜ.க வேட்பாளர் தர்விந்தர் சிங்கிடம் மணீஷ் சிசோடியா மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இது குறித்து சிசோடியா கூறுகையில், ``கட்சி தொண்டர்கள் கடினமாக உழைத்தார்கள். மக்களும் எங்களுக்கு ஆதரவு கொடுத்தனர். ஆனாலும் 600 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி ஏற்பட்டுவிட்டது" என்று தெரிவித்தார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-08/9ob9wrml/u2ikb8joatishi-650x40008February25.avif)
இதற்கு முன்பு சிசோடியா பட்பர்கஞ்ச் தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதல் முறையாக ஜங்க்பூரா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்து இருக்கிறார். இதே போன்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சட்டமன்ற தேர்தலில் புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்டார். ஆரம்பத்தில் பின் தங்கி இருந்த கெஜ்ரிவால் பின்னர் முன்னேறி வந்தார். ஆனால் கடைசியில் அரவிந்த் கெஜ்ரிவால் பா.ஜ.க வேட்பாளர் பர்வேஷ் சாஹேப் சிங்கிடம் தோற்றுப்போனார். பர்வேஷ் சாஹேப் சிங்தான் பா.ஜ.க சார்பாக முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர பா.ஜ.க-வின் வீரேந்திர சச்சிதேவ் என்பவர் பெயரும் முதல்வர் பதவிக்கு அடிபடுகிறது. ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் அதிஷி தான் போட்டியிட்ட தொகுதியில் வெற்றி பெற்றுவிட்டார். கடைசியாக கிடைத்த தகவலின் படி காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறது.