செய்திகள் :

Dhoni : `இன்றைய போட்டியோடு ஓய்வை அறிவிக்கிறாரா தோனி?'- பரவும் செய்தியும் பின்னணியும்

post image

'பரவும் செய்தி!'

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் இன்று சேப்பாக்கத்தில் மோதவிருக்கிறது. ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு காயம் ஏற்பட்டிருப்பதால் தோனி இந்தப் போட்டியில் கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் செய்தி வெளியானவுடன் தோனி இன்றைய போட்டியோடு ஓய்வு பெறப்போகிறார் எனப் பல்வேறு செய்தி நிறுவனங்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மையிலேயே தோனி இன்றைய போட்டியோடு ஓய்வை அறிவிக்கப் போகிறாரா?

'பின்னணி என்ன?'

சென்னை அணியின் நிர்வாகத்தினர் வட்டாரத்திலும் சேப்பாக்கத்தின் வட்டாரத்திலும் இப்படி ஒரு பேச்சே அடிபடவில்லை. தோனி இன்றைய போட்டியில் கேப்டனாக இருக்கக்கூடும் என்ற தகவலை மட்டும்தான் மைக் ஹஸ்ஸி பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.

தோனி
தோனி

ருத்துராஜூக்கு காயம் குணமாகாவிடில் டெல்லிக்கு எதிரான போட்டியில் கேப்டன் யார் என ஹஸ்ஸியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஹஸ்ஸி, ''ருத்துராஜ் குணமாகிவிடுவார் என நம்புகிறோம். இன்றும் பேட்டிங் ஆடுகிறார். ஆனால், இன்னும் எதுவும் உறுதியாகவில்லை.

ருத்துராஜ் கேப்டனாக இல்லையெனில், யார் கேப்டனாக இருப்பார் என்பதை பற்றி ருத்துராஜூம் ப்ளெம்மிங்கும்தான் முடிவு செய்வார்கள். எங்கள் அணியில் ஒரு இளம் விக்கெட் கீப்பர் இருக்கிறார். அவர் கேப்டனாக இருக்கலாம்." என்றார்.

போட்டிக்கு முந்தைய நாளான நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் இவ்வளவுதான் நடந்தது. ஆனால், அதற்குள் எதோ தோனியின் Farewell க்காக கேப்டன்சி கொடுக்கப்படுவதை போல வெளியில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. அப்படியெல்லாம் இல்லவே இல்லை. ருத்துராஜ் காயமடைந்திருக்கிறார். அவரால் ஆட முடியாதபட்சத்தில் தோனி கேப்டனாக இருப்பார் என்பது மட்டுமே நம்பத்தகுந்த செய்தி.

தோனி
தோனி

இந்திய அணிக்கே தோனி இதே மாதிரி கேப்டனாக இருந்திருக்கிறார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு போட்டியில் விராட் கோலி எதோ காரணங்களால் ஆட முடியாமல் போக தோனி ஒரே ஒரு போட்டியில் மட்டும் மீண்டும் கேப்டனாக செயல்பட்டிருப்பார். இங்கேயும் அதுதான் நடக்கப்போகிறது. தோனி மாதிரியான ஒரு வீரர் இப்படி சீசனின் நடுவிலேயே கட்டாயம் ஓய்வை அறிவிக்கமாட்டார். வெறும் நான்கு போட்டிகளோடு ஓய்வை அறிவிப்பதாக இருந்தால் அவர் இந்த சீசனுக்கே வந்திருக்கமாட்டார். இருப்பினும் அனைவரும் எதிர்பார்க்காத வகையில் ஏதாவது ஒரு சர்ப்ரைஸையும் தோனி செய்யக்கூடியவர் என்பதால் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

PBKS vs RR: "இந்தத் தோல்விகூட நல்லதுதான்" - விவரிக்கும் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர்

ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நேற்று (ஏப்ரல் 5) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 2... மேலும் பார்க்க

PBKS Vs RR: "ஆர்ச்சர் - சந்தீப் சர்மா கூட்டணி அபாயகரமான கம்போ" - வெற்றி குறித்து சஞ்சு சாம்சன்

ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நேற்று (ஏப்ரல் 5) நடைபெற்ற ஐபிஎல் 50 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, பஞ்சாப் பந்த... மேலும் பார்க்க

PBKS Vs RR: "எல்லா நாள்களும் ஒரேமாதிரியாக இருக்கப் போவதில்லை" - ஆட்டநாயகன் ஆர்ச்சர்

ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நேற்று (ஏப்ரல் 5) நடைபெற்ற ஐபிஎல் 50 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, ஜெய்ஸ்வால், ... மேலும் பார்க்க

PBKS vs RR: பஞ்சாப்பின் வெற்றியைத் தகர்த்த சேட்டன் சஞ்சு & கோ; ராஜஸ்தான் வென்றது எப்படி?

ஐபிஎல் இன்றைய (ஏப்ரல் 5) போட்டியில் ராஜஸ்தான் அணியும், பஞ்சாப் அணியும் நேருக்குநேர் களமிறங்கின. காயம் காரணமாக முதல் மூன்று போட்டிகளில் கேப்டனாக செயல்படாமல் இம்பேக்ட் பிளேயராக பேட்டிங் மட்டும் செய்துவந... மேலும் பார்க்க

PBKS vs RR: ``அணிக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி'' - மீண்டும் கேப்டனான சஞ்சு சாம்சன்

ஐபிஎல் இன்றைய (ஏப்ரல் 5) போட்டியில் ராஜஸ்தான் அணியும், பஞ்சாப் அணியும் நேருக்கு நேர் களமிறங்கின. காயம் காரணமாக முதல் மூன்று போட்டிகளில் கேப்டனாக செயல்படாமல் இம்பேக்ட் பிளேயராக பேட்டிங் மட்டும் செய்துவ... மேலும் பார்க்க

CSK vs DC : 'எங்களால் எவ்வளவு முயன்றும் முடியவில்லை...' - கேப்டன் ருத்துராஜ் வேதனை

'சென்னை அணி தோல்வி!'சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த டெல்லிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது. சேப்பாக்கத்தில் சென்னை அணியை டெல்லி அணி 15 ஆண்டுகள் கழித்து வீழ்த்த... மேலும் பார்க்க