அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்: எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்
Dhoni: "CSK ரசிகர்களிடம் தோனி இதைச் சொல்ல வேண்டும்" - சென்னை அணியின் முன்னாள் வீரர் ஓப்பன் டாக்
ஐபிஎல் இன்றைய (மார்ச் 28) போட்டியில் ருத்துராஜ் தலைமையிலான சி.எஸ்.கே அணியும், பட்டிதார் தலைமையிலான ஆர்.சி.பி அணியும் சேப்பாக்கத்தில் மோதுகின்றன. கடந்த சீசனில், சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் ஆர்.சி.பி-யிடம் தோற்றதால் சி.எஸ்.கே-வால் பிளேஆஃப் சுற்றுக்கு முடியாமல் போனது.
ஆனால், அதைவிட அப்போட்டியில் தோற்ற பிறகு மைதானத்தில் ஆர்.சி.பி வீரர்களும், மைதானத்துக்கு வெளியே ஆர்.சி.பி ரசிகர்களும் செய்த செயலுக்கு, இன்று சரியான பதிலடி கிடைக்கும் என சி.எஸ்.கே ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அதேசமயம், சி.எஸ்.கே-வின் வெற்றி, தோல்வியைக் கடந்து தோனி களமிறங்கினால் போதும், தோனி பேட்டிங் செய்தால்போதும், தோனி சிக்ஸ் அடித்தால்போதும் என்று ஒரு கூட்டம் ஆரவாரம் செய்கிறது.
இந்த நிலையில், சென்னை அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு, சி.எஸ்.கே ரசிகர்கள் அனைவரும் முதலில் தோனி ரசிகர்கள் என்று வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
`தல' என்று சரியாகத்தான் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது!
ஸ்போர்ட்ஸ் ஊடகத்திடம் தோனி மீதான ரசிகர்களின் இத்தகைய ஆதரவு குறித்துப் பேசிய அம்பத்தி ராயுடு, ``இது மிகவும் விசித்திரமானது. ஆனால், விளையாட்டுக்கு இது நல்லதென்று நான் நினைக்கவில்லை. நீங்கள் புதியவராக இருந்தால் இது உங்களை அச்சுறுத்தும்.
இருப்பினும், இத்தகைய ஆதரவு மிகவும் அபாரமானது. நீங்கள் அங்கு விளையாடும்போது, சி.எஸ்.கே ரசிகர்கள் அனைவரும் முதலில் தோனி ரசிகர்கள் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.

இது மிகத் தெளிவாக இருக்கிறது. அது சரியானதும்கூட. ஏனெனில், பல ஆண்டுகளாக அணி அவ்வாறு அமைக்கப்பட்டுக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. `தல' என்று அவருக்கு சரியாகத்தான் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
சி.எஸ்.கே-வுக்காக அவர் என்ன செய்திருக்கிறார் என்பதை ரசிகர்கள் கண்மூடித்தனமாகப் பிரமிப்பாகப் பார்த்து நேசிக்கும் நிலை வந்திருக்கிறது." என்று கூறினார்.
தோனி நினைத்தால் சரி செய்யலாம்!
மேலும், கடந்த சில ஆண்டுகளாக தோனி பேட்டிங் செய்ய வரவேண்டும் என்பதற்காகச் சொந்த அணி வீரர்கள் அவுட்டாவதையே சி.எஸ்.கே ரசிகர்கள் ஆரவாரம் செய்வது பற்றி பேசிய அம்பத்தி ராயுடு, ``கடந்த சில ஆண்டுகளாக இது நடக்கிறது. சில வீரர்கள் அதை உணர்ந்திருக்கிறார்கள்.
வெளிப்படையாக யாரும் சொல்லவில்லை என்றாலும், நிறைய பேர் களத்தில் உணர்கின்றனர். தோனியை நேசிக்கும் ரசிகர்களும், நாமும் கூடவே அவர் பேட்டிங் செய்வதைக் காண விரும்புகிறோம்.

ஆனால், ஒருவர் பேட்டிங் செய்யச் செல்லும்போது கூட்டத்திலிருந்து கத்துகிறார்கள். உண்மையில், அந்த வீரர் அவுட்டாக வேண்டும் என்கிறார்கள். அவர் அவுட்டாவதை எதிர்பார்க்கிறார்கள்.
இதை தோனியால் மட்டும்தான் சரிசெய்ய முடியும். `அவர்கள் நம் வீரர்கள். நான் பேட்டிங் செய்வதைப் போல, மிடில் ஆர்டரில் அவர்கள் பேட்டிங் செய்கிறார்கள்' என்று தோனி சொன்னால்தான், கூட்டத்தை அமைதிப்படுத்த முடியும். வீரர்களுக்கும் அது நல்லதாக அமையும்" என்று கூறினார்.