செய்திகள் :

Doctor Vikatan: பால் அதிகம் குடிக்கும் குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்னை வருமா?

post image

Doctor Vikatan: குழந்தைகளுக்கு தினமும் எவ்வளவு பால் கொடுக்கலாம்?  நிறைய பால் கொடுத்தால் குழந்தைகளுக்கு உடல்பருமன் அதிகரிக்கும் என்பது உண்மையா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

பால் என்றில்லை, எந்த உணவானாலும் ஒட்டுமொத்தமாக கலோரி அதிகமானாலே, உடல் எடை அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் குழந்தைக்கு எந்த மாதிரியான பால் கொடுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே இதற்கு பதில் சொல்ல முடியும்.

ஃபுல் கிரீம்  மில்க் எனப்படும்  கொழுப்பு நீக்கப்படாத  பால் என்றால் அதில் கலோரியும் அதிகமிருக்கும் என்பதால், அதைக் குடிக்கும் குழந்தைகளுக்கு உடல் எடை அதிகரிக்கலாம். அதுவே, கொழுப்பு சதவிகிதம் குறைவாக உள்ள பால் குடிக்கும் குழந்தைகளுக்கு உடல் எடை அவ்வளவாக அதிகரிக்காது.

பால் என்பது புரதச்சத்தும் கால்சியம் சத்தும் மிக்கது என்பதை எல்லோரும் அறிவார்கள். எனவே, அது உடல் வளர்ச்சிக்கும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. வைட்டமின் டி, பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துகளும் பாலில் இருக்கும்.

active children

குழந்தைகளுக்கு அளவுக்கு அதிகமாக பால் கொடுத்தால், அதன் விளைவாக அவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்னையும் வரலாம்.  அதாவது திரவ உணவான பால் அவர்களது வயிற்றை நிரப்பிவிடுவதால், திட உணவுகள் எடுப்பது குறையும். அது சரியானதல்ல.  குழந்தைகளுக்கு தினமும் 400 மில்லி பால் கொடுப்பது போதுமானதாக இருக்கும். அப்படி தினமும் 400 மில்லி பால் கொடுப்பதாக வைத்துக்கொள்வோம். அதில் சர்க்கரை சேர்ப்பீர்கள். அதனாலும் உடல் எடை கூடும். பெற்றோர், பாலில் எத்தனை சதவிகிதம் கொழுப்பு உள்ளது என்பது தெரிந்து குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டியது முக்கியம்.

குழந்தைகள் எவ்வளவு ஆக்டிவ்வாக இருக்கிறார்கள் என்பதும் இதில் கவனிக்கப்பட வேண்டும். சில குழந்தைகள் விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுவார்கள். அவர்கள், வழக்கத்தைவிட சிறிதளவு பால் அதிகமாக எடுத்துக்கொண்டாலும், உடலியக்கம் காரணமாக அது அவர்களுக்கு பருமனை ஏற்படுத்தாது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

மகாராஷ்டிரா: `இப்பவே ஆரம்பிச்சுட்டாங்க..' - தேர்தல் தொடங்கிய நிலையில் பா.ஜ.கவில் சேர்ந்த வேட்பாளர்!

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் இன்று காலை தொடங்கி வாக்குபதிவு நடந்து வருகிறது. இத்தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக பா.ஜ.க தேசிய செயலாளர் வினோத் தாவ்டே மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்... மேலும் பார்க்க

Amit Shah: ``குற்றம் நிரூபிக்காமல் சிறையில் இருப்பவர்களுக்கு நீதி கிடைக்கும்'' - அமித்ஷா சொல்வதென்ன?

'குற்றம் நிரூபிக்கப்படாமல் ஜெயிலில் இருப்பவர்களுக்கு வரும் நவம்பர் 26-ம் தேதிக்குள் நீதி கிடைக்கும்' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். குற்றம் சாட்டப்பட்டு, ஆனால் குற்றம் நிரூபிக்கப்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட்: விறுவிறுப்பு... ஆர்வத்துடன் வாக்களித்த பாலிவுட், அரசியல் பிரபலங்கள்..!

மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதே போன்று ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத்திற்கு இன்று இரண்டாம் கட்டமாக 38 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. மகாராஷ்டிரா சட்டமன்றத் ... மேலும் பார்க்க

U.P: ``கும்பகர்ணன் ஆறு மாதங்கள் தூங்கவில்லை; அவர் ரகசியமாக..'' - என்ன சொல்கிறார் உ.பி ஆளுநர்?!

'உலகின் முதல் விமானத்தை உருவாக்கியது ரைட் சகோதரர்கள் அல்ல... பரத்வாஜ முனிவர் தான்' என்று உத்தரப்பிரதேச கவர்னர் ஆனந்திபென் பட்டேல் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது. லக்நௌவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்... மேலும் பார்க்க

கழிவறையை எத்தனை நாள்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்? | உலக கழிவறை தினம்!

உலக கழிவறை தினமான நவம்பர் 19 அன்று, ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருள் கொண்டு கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் ‘கழிப்பறைகள் – அமைதிக்கான இடம்’ என்ற கருப்பொருளில் கொண்டாடப்படுகிறது. முதலில் ஜாக் சிம் என... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் நடத்திய பாராட்டு விழா... வரவேற்பு முதல் பரிசுகள் வரை -Photo Album

எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுவிழா Mecheri-M.Kalipatti எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுவிழா Mecheri-M.Kalipatti எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுவிழா Mecheri-M.Kalipatti எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுவிழா ... மேலும் பார்க்க