செய்திகள் :

Doctor Vikatan: ஸ்டீம்பாத் (Steam bath) எடுத்தால் ஹார்ட் அட்டாக் வருமா?

post image

Doctor Vikatan: உடற்பயிற்சி செய்துவிட்டு, ஸ்டீம்பாத் (Steam bath) எனப்படும் நீராவிக்குளியல் எடுத்த நபர், மாரடைப்பில் உயிரிழந்த செய்தியைப் பார்த்தேன். ஸ்டீம்பாத் எடுப்பது என்பது உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதா.... யாரெல்லாம் ஸ்டீம்பாத் எடுக்கலாம்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்   

ஷீபா தேவராஜ்

ஸ்டீம்பாத் (Steam bath) எனப்படும் நீராவிக் குளியலுக்கும் மாரடைப்புக்கும் சம்பந்தமே இல்லை. ஸ்டீமிங் என்பது தசைகளைத் தளர்த்துவதற்காகச் செய்யப்படுவது. அதுவே விளையாட்டு வீரர்கள் ஸ்டீம்பாத் எடுக்கும்போது அது அவர்களது எடைக்குறைப்புக்கும் உதவியாக இருக்கும். நீராவிக் குளியலின் மூலம் நிகழும் தெர்மோஜெனிக் எஃபெக்ட்தான் (thermogenic effect) எடைக்குறைப்புக்கு உதவும். அதாவது சூடான நீராவியியானது  உடலின் வெப்பநிலையை அதிகரித்து, அதிக கலோரிகள் எரிக்கப்பட வழி செய்யும்.

ஸ்டீம்பாத் எடுக்கும் அறையில் மணிக்கணக்காக இருக்க வேண்டியதில்லை. அதிகபட்சம் 5 முதல் 10 நிமிடங்கள்தான் அந்த அறையில் இருக்க வேண்டியிருக்கும். அதன் பிறகு வெளியே வந்து ஷவர் குளியல் எடுக்க வேண்டியதுதான். எனவே, இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த நபரின் இறப்புக்கும், அவர் எடுத்த நீராவிக் குளியலுக்கும் எந்தத் தொடர்பும் இருக்க வாய்ப்பில்லை. அந்த நபர் உயிரிழப்பதற்கு முன்பு என்னவெல்லாம் நடந்தது என்பதைத்தான் இங்கே கவனிக்க வேண்டும்.  மாரடைப்பு உள்ளிட்ட இதயநோய் பாதிப்புகளுக்கான ரிஸ்க் ஓரிரவில் ஆரம்பிக்கிற விஷயமல்ல. அப்படி ஏதேனும் அசம்பாவிதம் நடக்கலாம் என்ற நிலையில், அதற்கு முன்பே, உடல் சில அறிகுறிகளை உணர்த்தும்.

சம்பந்தப்பட்ட நபர், சரியாகத் தூங்கும் வழக்கம் உள்ளவரா, சரியாக ஓய்வெடுப்பவரா, சப்ளிமென்ட்டுகள் எடுத்துக்கொள்பவரா, அப்படி எடுப்பவர் என்றால் அது தரமான சப்ளிமென்ட்டா என்றெல்லாம் பார்க்க வேண்டும். இந்தச் சம்பவத்தில் அந்த நபர் அதிக நேரம் வொர்க் அவுட் செய்ததாகச் சொல்லப்படுகிறது. அளவுக்கதிகமான உடற்பயிற்சியும் இத்தகைய உயிரிழப்புகளுக்கு காரணம்.  அளவுக்கதிக ஸ்ட்ரெஸ்ஸும் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

வொர்க் அவுட்

மாரடைப்பைப் பொறுத்தவரை, இன்று அதற்கான காரணம் ஆரம்பித்து அடுத்தநாளே அட்டாக் வந்துவிடாது. பலநாள்களாக உடலில் உள்ள பல பிரச்னைகளை அலட்சியப்படுத்தியதன் விளைவாகவே ஒருநாள் அது நிகழும். தூக்கமின்மை, ஓய்வின்மை, போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, தவறான சப்ளிமென்ட்டுகள் எடுப்பது என பல விஷயங்களின் விளைவாகத்தான் இதைப் பார்க்க வேண்டியுள்ளது. இந்த நபர், தொடர்ச்சியாகப் பல மணி நேர உடற்பயிற்சிக்குப் பிறகு ஸ்டீமிங் எடுக்கச் சென்றிருக்கிறார். நீராவிக் குளியலுக்கு முன்பே அவரது இதயம் பலமிழந்திருக்கும்.

மற்றபடி ஸ்டீமிங் என்பது மிக நல்ல விஷயம். யார் வேண்டுமானாலும் நீராவிக் குளியல் எடுக்கலாம்.  ஸ்பா மசாஜ் எடுப்பவர்களுக்குக்கூட இப்போது ஸ்டீம் பாத் கொடுக்கப்படுகிறது. எனவே, இதயநலன் என்பது வாழ்வியல் முறை, உணவுப்பழக்கம், மனநிலை போன்றவற்றைப் பொறுத்தது. இந்த விஷயங்களில் கவனமாக இருந்தால் மாரடைப்பு ஆபத்திலிருந்து விலகி இருக்கலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

தேர்தல் பத்திரம் மூலம் மிரட்டி நன்கொடை பெற்றாரா..? நிர்மலா சீதாராமன் வழக்கில் விசாரணை..!

கடந்த ஏப்ரல் மாதம், ஆதர்ஷ் ஐயர் என்பவர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில், ``ரெய்டு என்று மிரட்டி தொழிலதிபர்களிடம் இருந்து நிர்மலா சீதாராமன், ஜெ.பி.நட்டா, கர்நாடகா முன... மேலும் பார்க்க

Gym: ஜிம் மரணங்கள் தொடர்வது ஏன்? - ``நிச்சயம் தவிர்க்க முடியும்" மருத்துவர்கள் விளக்கம்!

'ஜிம்'முக்குப் போகிறவர்கள் ஆரோக்கியமானவர்கள்‌ என்று எல்லோருமே நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால், ஜிம் மரணங்கள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன. நேற்றைய தினம்கூட, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜிம் உரிமைய... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: `இப்பவே ஆரம்பிச்சுட்டாங்க..' - தேர்தல் தொடங்கிய நிலையில் பா.ஜ.கவில் சேர்ந்த வேட்பாளர்!

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் இன்று காலை தொடங்கி வாக்குபதிவு நடந்து வருகிறது. இத்தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக பா.ஜ.க தேசிய செயலாளர் வினோத் தாவ்டே மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்... மேலும் பார்க்க

Amit Shah: ``குற்றம் நிரூபிக்காமல் சிறையில் இருப்பவர்களுக்கு நீதி கிடைக்கும்'' - அமித்ஷா சொல்வதென்ன?

'குற்றம் நிரூபிக்கப்படாமல் ஜெயிலில் இருப்பவர்களுக்கு வரும் நவம்பர் 26-ம் தேதிக்குள் நீதி கிடைக்கும்' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். குற்றம் சாட்டப்பட்டு, ஆனால் குற்றம் நிரூபிக்கப்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட்: விறுவிறுப்பு... ஆர்வத்துடன் வாக்களித்த பாலிவுட், அரசியல் பிரபலங்கள்..!

மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதே போன்று ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத்திற்கு இன்று இரண்டாம் கட்டமாக 38 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. மகாராஷ்டிரா சட்டமன்றத் ... மேலும் பார்க்க

U.P: ``கும்பகர்ணன் ஆறு மாதங்கள் தூங்கவில்லை; அவர் ரகசியமாக..'' - என்ன சொல்கிறார் உ.பி ஆளுநர்?!

'உலகின் முதல் விமானத்தை உருவாக்கியது ரைட் சகோதரர்கள் அல்ல... பரத்வாஜ முனிவர் தான்' என்று உத்தரப்பிரதேச கவர்னர் ஆனந்திபென் பட்டேல் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது. லக்நௌவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்... மேலும் பார்க்க