மீனவர்களை விடுவிக்கக் கோரி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம...
Dragon 100: "அப்போ நடிச்சா ஹீரோவாகதான் நடிப்பேன்னு சொல்லிட்டேன்!" - பிரதீப் ரங்கநாதன் ஸ்பீச்!
அஸ்வத் மாரிமுத்து - பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் டிராகன். ஹீரோவாகத் தொடர்ந்து ஹிட் வரிசைகளை அடுக்கி வருகிறார் பிரதீப் ரங்கநாதன்.
டிராகன் படத்தில் பிரதீப்புடன் கயாடு லோஹர், அனுபாமா பரமேஷ்வரன், மிஷ்கின் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இப்படத்தின் 100-வது நாள் விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவருக்கும் சிறப்பு நினைவுப் பரிசு ஒன்று வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதீப் ரங்கநாதன் பேசும்போது, "ஓ மை கடவுளே படம் பண்ணும்போது, அஸ்வத் அதில் ஒரு கதாபாத்திரம் நடிக்கக் கூப்பிட்டார். ஆனால், நான் ஒரு நம்பிக்கையில் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று சொல்லிவிட்டேன். லவ் டுடே முடித்ததற்குப் பிறகு அஸ்வத்துக்கு படம் காண்பித்தேன். பிறகு, 'நீங்கள் என்னை வைத்து ஒரு படம் டைரக்ட் பண்ணுகிறீர்களா'னு கேட்டேன்.
முதல் படம் அவருக்கு பெரிய ஹிட். அவருக்கு கண்டிப்பாக இரண்டாவது படத்தில் பெரிய சம்பளம் கிடைக்க வேண்டும். அவரிடம் நானே மார்க்கெட் பெரிதாக்கிவிட்டு வருகிறேன்னு சொல்லிவிட்டேன்.
அதற்கு இன்னும் சில படங்கள் ஆகும்னு நினைத்தேன். ஆனால், அது அடுத்தப் படத்திலேயே அமைந்ததற்குக் காரணம் ஆடியன்ஸாகிய நீங்கள்தான். லவ் டுடே படத்தின் ஹிட்டுக்குப் பிறகு அவராகவே எனக்கு ஃபோன் பண்ணினார்.
100 நாள் ஓடும் மாதிரியான படத்தைக் கொடுக்கிறேன்னு சொன்னார். அதே மாதிரி இன்று 100-வது நாள் விழா! அஸ்வத் சொன்னதைக் காப்பாற்றியதற்கு நன்றி.

ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்தோடு இது எனக்கு இரண்டாவது 100-வது நாள் விழா. எனக்கு இது மூன்றாவது 100-வது நாள் விழா. ஹாட்ரிக் எனக்கு! டிராகன் படத்தின் வெற்றி எனக்கு ரொம்பவே முக்கியம்.
ஏனெனில், டைரக்ஷனில் என்னுடைய முதல் படத்துக்குப் பிறகு இரண்டாவது படம் வெற்றியாக வேண்டும். 'One time wonder' மாதிரி ஆகிவிடக்கூடாது. ஆனால், 'லவ் டுடே' படத்தில் நான் நடிகராக அறிமுகமானதால், எனக்கு அது முதல் படம் மாதிரி ஆகிவிட்டது. அதுவும் ஹிட் ஆகிவிட்டது.
சரி, என்னுடைய டைரக்ஷனில் ஹிட் கொடுத்துவிட்டேன். மற்றவர்களுடைய டைரக்ஷனில் நடிக்க முடியுமா என்று பேசுவார்கள். பிறகு இந்தப் படம் ஹிட்டாகியிருக்கிறது. நான் ஆடியன்ஸாகிய உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்." என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...