செய்திகள் :

Dubai: தங்க இழை தூவிய Gold Karak Tea; டீ குடித்துவிட்டு வெள்ளி டம்ளரை எடுத்து செல்லலாம் - விலை என்ன?

post image

வெள்ளி போப்பையில் தங்க இழை, தங்க துகள்கள் தூவப்பட்டு தரப்படும் தேநீர் குறித்த Food Vloger-ன் இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வாடிக்கையாளர்கள் நினைவு பரிசாக அந்த வெள்ளிக் கோப்பையையும் எடுத்துச் செல்லலாம் என்று கூறப்படுகிறது. ஆகா தாராளமான கடையாக இருக்கிறதே என்று நினைத்தால்... இந்த ஒரு கப் தேநீரின் விலை ஒரு லட்சத்திற்கும் அதிகம். இது தேநீர் பிரியர்களிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியர்களின் அன்றாட வாழ்வில் தேநீர்(tea) மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. காலையில் ஒரு கப் தேநீருடன் தொடங்கும் நாள் மீண்டும் ஒரு கப் தேநீருடன் தான் முடிவடைகின்றது. இதற்கிடையில் ஜாலிக்காக ஒரு கப், சோகத்திற்காக ஒரு கப், களைப்பின் போது ஒரு கப், இப்படி வாங்க ஒரு டீ போட்டுவிட்டு வரலாம் என்று கூறுவோர் ஏராளம்.

Gold Karak tea

இவ்வாறு நம் அன்றாட வாழ்வில் அசால்டாக குடிக்கும் தேநீரின் விலை ஒரு லட்சம் என்றால் அது சற்று ஆச்சரியம் தான்.

இந்த தேநீரை விற்பது துபாயில் உள்ள ஃபோஹோ கஃபே. 24 கேரட் தங்க இழைகளுடன் வழங்கப்படும் 'கோல்ட் காரக்' தேநீரை ஒரு லட்சத்திற்கு மேல் கொடுத்தால் தான் உங்களால் வாங்க முடியும். என்னதான் பிசினஸ் ஐடியாவாக இருந்தாலும் ஒரு லட்சம் கொடுத்து டீ குடிப்பதா... என்கின்றனர் நெட்டிசன்கள்.

இந்த யூடியூபர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், ''உலகின் மிக ஆடம்பரமான காரக் தேநீரின் சுவையை அனுபவிக்கவும். வெள்ளி கோப்பையில் 24 கேரட் தங்கத் துகள்கள் தூவப்பட்டு ஒவ்வொரு துளியிலும் அதன் பிரமாண்டத்தை அனுபவிக்கலாம், அத்துடன் உங்களுக்கென வெள்ளி கோப்பையை எடுத்துச்செல்லலாம்." என்று பதிவிட்டுள்ளார்..

டீ பிரியர்கள் அதிக விலை கொண்ட இந்த தேநீருக்கு வரவேற்பளிக்கவில்லை என்பதை கமென்ட் செக்‌ஷனைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.வெள்ளி கோப்பை மற்றும் தங்க துகள்களுக்கு இவ்வளவு விலை வசூலிப்பது அதிகம் என்றும் தேநீரின் சுவையை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது தங்க துகள்களின் குறுக்கீடு தேவையில்லை என்றும் விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர்.

South Korea: கட்டாய ராணுவ பணியைத் தவிர்க்கத் திட்டம் போட்ட இளைஞர்; நண்பரோடு சிறையிலடைத்த அரசு!

தென் கொரியாவில், கட்டாய ராணுவ பணியிலிருந்து தப்பிக்க வித்தியாசமான முயற்சியில் இறங்கிய இளைஞரைப் பிடித்து அரசு சிறையிலடைத்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது. தென் கொரியாவைப் பொறுத்தவரை, 18 வயதுக்கு மேற்பட்ட ... மேலும் பார்க்க

பொள்ளாச்சி: வைரலான தேங்காய் வடிவ இருக்கை; தேங்காய் வியாபாரி வீட்டுத் திருமணமா? பின்னணி என்ன?

கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி 'தென்னை நகரம்' என்றழைக்கப்படுகிறது. தேங்காய் சாகுபடியில் இந்தியளவில் பொள்ளாச்சிதான் முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 8 கோடி தென்னை மரங்களில் 3.5 கோடிக்கும் மேற... மேலும் பார்க்க

UP: பண மாலையைப் பறித்துச் சென்ற டெம்போ டிரைவர்... சேஸ் செய்து மீட்ட மணமகன்! | Viral Video

உத்தரப்பிரதேசத்தில் மணக் கோலத்தில் ஒருவர் பைபாஸில் பைக்கிலிருந்து, ஓடும் மினி டெம்போவுக்குத் தாவி சேஸிங்கில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இதுகுறித்து வெளியான தகவலின்படி மீரட்டில... மேலும் பார்க்க

China: வாரத்திற்கு 3 நாள் ஆஸ்திரேலியா டு சீனாவுக்குப் பயணம்; காதலுக்காகக் கண்டம் தாண்டும் இளைஞர்!

சீனாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தனது கல்வி பாடங்களில் கலந்து கொள்வதற்காகவும், காதலியைச் சந்திப்பதற்காகவும், சீனாவிலிருந்து ஆஸ்திரேலியா வரை மூன்று மாத காலங்களாக வாரத்திற்கு மூன்று நாட்கள் பயணம் மேற்கொண்... மேலும் பார்க்க

'கமிட் ஆனால் காசு!' - காதலை ஊக்குவித்து காசு கொடுக்கும் சீன நிறுவனம்!

சிங்கிளாக இருப்பவர்கள் கமிட்டானால் 66 யுவான் (நம்மூர் காசுக்கு ரூ.750) ரொக்க பரிசாக வழங்குகிறதாம் சீன நிறுவனம் ஒன்று. சீனாவை சேர்ந்தது இன்ஸ்டா 360 என்னும் கேமரா கம்பெனி. இவர்கள் கம்பெனிக்கென்று ஒரு டே... மேலும் பார்க்க

குடிபோதையில் பள்ளியில் ஆசிரியர்கள் தகராறு; கைது செய்ய போதையில் வந்த கான்ஸ்டபிள்... பீகாரில் கொடுமை!

பீகார் மாநிலத்தில் மது விலக்கு அமலில் இருக்கிறது. ஆனாலும் கள்ளச்சாராயம் அதிக அளவில் விற்பனையாகிறது. பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் பள்ளிக்கு ஆசிரியர்கள் இரண்டு பேர் குடிபோதையில் வந்து மாணவர்களுக்... மேலும் பார்க்க