போதைப் பொருள் விற்கும் யாரையும் விட்டுவைக்க மாட்டோம் - அமித் ஷா உறுதி
ED: யுவராஜ் சிங், உத்தப்பா முதல் நடிகை ஊர்வசி வரை... சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை! - பின்னணி என்ன?
ஆன்லைன் சூதாட்ட செயலிகளின் விளம்பரங்கள் தொடர்பான விசாரணையை அமலாக்கத்துறை நாடுமுழுவதும் முடுக்கிவிட்டிருக்கிறது.
அதன் அடிப்படையில், கிரிக்கெட் வீரர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களுக்கு விசாரணை சம்மன் அனுப்பியிருக்கிறது.
1xBet, Junglee Rummy, JeetWin, Lotus365 போன்ற பல ஆன்லைன் சூதாட்ட செயலிகள் திறன் அடிப்படையிலான விளையாட்டு என விளம்பரம் செய்து சூதாட்ட நிறுவனங்களை இயக்கி வருவதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டுகிறது.
யுவராஜ் சிங், நடிகர் சோனு சூட் உள்ளிட்டோருக்கு சம்மன்!

இந்தியச் சட்டங்களின்படி இது சட்டவிரோதமானது. பல கோடி மோசடி நடந்திருப்பதும், வரி ஏய்ப்பு செய்வதாகவும் புகார் எழுந்திருக்கிறது.
அதனால், இந்த செயலிகளுக்கான விளம்பரங்களில் நடித்த கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் வீரர்கள் ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா, நடிகை ஊர்வசி ரௌதெலா, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மிமி சக்ரவர்த்தி ஆகியோரிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.
அதைத் தொடர்ந்து தற்போது கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா, யுவராஜ் சிங், நடிகர் சோனு சூட் ஆகியோருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருக்கிறது.
இந்த விசாரணையில், விளம்பரத்துக்காக அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டது, அவர்களின் பங்கு என்ன என்பது குறித்துக் கேள்வி கேட்கப்படுவதாகக் கூறப்படுகிறது.